அடிவயிற்று தொப்பையை குறைக்க வேண்டுமா? இந்த பானத்தை தினமும் குடியுங்கள்!
Weight Loss Tips: நம்மில் பலருக்கும் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்க ஆசை இருக்கும். ஆனால் எவ்வளவு டயட் இருந்தாலும் சிலருக்கு உடல் எடை குறையாது.
Weight Loss Drinks: பெரும்பாலான மக்களின் இன்றைய முக்கிய பிரச்சனை உடல் பருமன். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் உடல் எடையை குறைக்க நிறைய முயற்சிகள் மேற்கொள்கின்றனர். ஆனால் அதற்கு முறையான, நல்ல ஆரோக்கியமான உணவு பழக்கம், உடற்பயிற்சி, டயட் போன்றவை தேவைப்படுகிறது. நீங்களும் உடல் எடையை குறைக்க விரும்பினால் தினசரி சில பானங்களை குடிக்க வேண்டும். இந்த நிலையில் அடிவயிற்று தொப்பை கொழுப்பை குறைக்க, சில எடை இழப்பு பானங்களை குடிக்க வேண்டியது அவசியம். இவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் பானங்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த பானங்களை எங்கும் கடைகளில் வாங்காமல், வீட்டிலேயே தயாரித்து குடிக்கலாம். இவை உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்க | கர்ப்பம் தரிக்க உதவும் யோகாசனங்கள்! இத்தனை இருக்கிறதா?
பெருஞ்சீரகம் விதை: பெருஞ்சீரகம் விதை இந்தியில் சான்ஃப் என்று பிரபலமாக அறியப்படுகின்றன. பெருஞ்சீரகம் பொதுவாக இயற்கையான வாய் புத்துணர்ச்சியாகப் பயன்படுத்தப்படுகிறது, இது பழங்கால இந்திய மசாலாப் பொருட்களாகும். இது இனிப்பு-கசப்பு சுவை கொண்ட குளிர்ச்சியான மசாலா. ஆனால் அதன் மூலம் உடல் எடையைக் குறைக்கவும் முடியும். பெருஞ்சீரகம் விதையில் வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளன. ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகத்தை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் அதனை வடிகட்டி குடிக்கவும். இது வயிற்று கொழுப்பைக் குறைப்பது மட்டுமல்லாமல், செரிமானத்தையும் நன்கு மேம்படுத்துகிறது.
எலுமிச்சை மற்றும் தேன்: எலுமிச்சை மற்றும் தேன் கலவையில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்றவை உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. எலுமிச்சை மற்றும் தேன் கலவையானது எடை குறைக்க சிறந்த வழியாக கருதப்படுகிறது. இவை செரிமானத்திற்கு நன்கு உதவுகிறது. வலியை நீக்குகிறது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. தண்ணீரை நன்கு சூடாக்கி, எலுமிச்சை சாற்றை பிழிந்து, அதில் தேன் சேர்த்து குடித்து வரவும்.
ஓமம் தண்ணீர்: ஓமம் பழங்கால மருத்துவத்தில் இருந்து பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படும் ஒரு இயற்கை மூலிகையாகும். உணவின் சுவையை அதிகரிக்க ஓமம் பயன்படுத்தப்படுகிறது. இதனை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால், பல நன்மைகளை பெற முடியும். அதன் மூலம் அதிகரிக்கும் எடையை வேகமாக குறைக்கலாம். ஓமத்தை நன்கு வறுத்து தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் வடிகட்டி குடிக்கவும். இதனை தினசரி வழக்கத்தில் கொண்டு வந்தால் பல நன்மைகளை பெற முடியும்.
கிரீன் டீ: கிரீன் டீ குறைந்த கலோரி கொண்ட பானமாக உள்ளது. இவை உடல் எடையை குறைக்க உதவும். மேலும், சரியான அளவிலான உடல் எடையை பராமரிக்கவும் பெரிதும் பயன்படுகிறது. இது வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. கிரீன் டீ-யில் பூஜ்ஜிய கலோரி உள்ளது. எனவே, இதனை காலையில் தினசரி எடுத்து கொள்வது நல்லது. கிரீன் டீ-யில் உள்ள காஃபின் உள்ளடக்கம் கொழுப்பை எரிக்க உதவுகிறது. உடல் எடை குறைய 2 முதல் 4 கப் கிரீன் டீ குடிப்பது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சரும பிரச்சனைகளை ஒரே அடியாக தவிர்க்க வேண்டுமா? ‘இந்த’ பானங்களை குடித்து பாருங்கள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ