தனியா: சுகர் லெவெல் முதல் இரத்த அழுத்தம் வரை.. அற்புதமான வீட்டு வைத்தியம், இப்படி உட்கொள்ளலாம்
Benefits of Coriander Seeds: மல்லி விதைகளை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் ஏற்படுகின்றன? இவற்றை எப்படி உட்கொள்வது? அதனால் நமக்கு என்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்?
Benefits of Coriander Seeds: இந்தியர்களாகிய நம் சமையலறையில் கொத்தமல்லி விதையான தனியா மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது. இது இல்லாமல் பல இந்திய உணவுகளின் சுவை முழுமையடையாது. உலர்ந்த மல்லி விதைகள் மசாலாப் பொருளாக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. மல்லி விதைகள் மட்டுமல்லாமல், கொத்தமல்லி இலைகளும் உணவின் சுவையை அதிகரிக்கின்றன. ஆனால், மல்லி விதைகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்கு அளவே இல்லை. மல்லி விதைகளில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே ஆகியவை உள்ளன. இவை தவிர, தனியா ஃபோலிக் அமிலம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவற்றின் மிக முக்கியமான ஆதாரமாகும். மல்லி விதைகளை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் ஏற்படுகின்றன? இவற்றை எப்படி உட்கொள்வது? அதனால் நமக்கு என்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்? இவை அனைத்தை பற்றியும் இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
தனியா: அடர்த்தியான மென்மையான கூந்தலுக்கான வீட்டு வைத்தியம் (Coriander Seeds: Home Remedy For Hair Growth)
உங்கள் தலைமுடி உதிர்கிறதா? ஹார்மோன் சமநிலையின்மை, பதற்றம், மயிர்க்கால்கள் பலவீனமடைதல் மற்றும் உணவில் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கலாம். உங்கள் தலைமுடிக்கு தடவி வரும் எண்ணெயில் மல்லி தூளை கலந்து வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மசாஜ் செய்யவும். இது முடி உதிர்தல் பிரச்சனையை குறைக்கும். கொத்தமல்லி விதைகள் முடியின் வேர்களை வலுப்படுத்தி, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
தனியா: பருக்களுக்கான வீட்டு வைத்தியம் (Coriander Seeds: Home Remedy For Pimples)
உங்கள் சருமம் எண்ணெய் பசையாக இருந்தால், அடிக்கடி பருக்களின் பிரசனையால் நீங்கள் அவதிப்படலாம். சமையலறையில் இருக்கும் மல்லி விதைகள் முகப்பருவைக் குறைக்க உதவும். மல்லி விதைகள் கொண்டு வீட்டிலேயே ஃபெஸ் மாஸ்க் தயாரிக்கலாம். இதற்கு, கொத்தமல்லி விதைகளை தண்ணீர் விட்டு அரைத்து, ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் முல்தானி மிட்டி மற்றும் தேன் விருப்பப்படி சேர்த்து பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, காய்ந்த பின் நன்கு கழுவவும். மேலும் கரும்புள்ளிகளை நீக்கி பாக்டீரியா தொற்றுகளில் இருந்தும் இது பாதுகாக்கிறது.
தனியா: நீரிழிவு நோய்க்கான வீட்டு வைத்தியம் (Coriander Seeds: Home Remedy For Diabetes)
நீரிழிவு நோய் இன்று மிகவும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. சர்க்கரை அளவை குறைப்பதில் (Sugar Control) மல்லி விதைகளின் நன்மைகளைப் பெற, இரவில் ஒரு கைப்பிடி விதைகளை தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் விதைகளை வடிகட்டி தண்ணீர் குடிக்கவும். சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், கொத்தமல்லி விதை நீரை தொடர்ந்து குடிக்கலாம். இந்த நீர் இரத்த குளுக்கோஸைக் குறைத்து, இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. இந்த நீரின் நுகர்வு LDL ஐக் குறைத்து HDL ஐ அதிகரிக்கிறது.
தனியா: சரும பாதுகாப்பில் உதவும் (Coriander Seeds: Home Remedy For Skin Care)
தனியா தோல் அழற்சி, அரிப்பு மற்றும் வெடிப்புகளுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மல்லி விதைகள் வாய் புண்கள் மற்றும் காயங்களுக்கும் சிகிச்சை அளிக்கின்றன. ஒரு ஸ்பூன் தனியாவை தண்ணீரில் கொதிக்க வைத்து, பின் அதை ஆறவைத்து, இந்த தண்ணீர் கொண்டு வாயை கொப்பளிக்கவும். இப்படி செய்தால் வாய் புண்களில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். இதுமட்டுமின்றி, ஊறவைத்த கொத்தமல்லி விதைகளை அரைத்து, அதனுடன் சிறிது தண்ணீர் மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்ட்டை அரிப்பு உள்ள தோலில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவினால் நிவாரணம் கிடைக்கும்.
தனியா: சளி மற்றும் காய்ச்சலில் நன்மை பயக்கும் (Coriander Seeds: Home Remedy For Cold)
காயங்களை குணப்படுத்த உதவுவதோடு, தனியா சளி மற்றும் காய்ச்சலுக்கு எதிராகவும் நம்மை பாதுகாக்கின்றது. கொத்தமல்லியில் பல அத்தியாவசிய வைட்டமின்கள் உள்ளன. இது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க உதவுகிறது.
தனியா: செரிமானத்தை சீராக்க வீட்டு வைத்தியம் (Coriander Seeds: Home Remedy For Digestion)
தனியா செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஒரு டம்ளர் கொத்தமல்லியை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்து, விதைகளை எடுத்து, வெறும் வயிற்றில் அந்த தண்ணீரைக் குடிக்கவும். உங்கள் செரிமானம் சரியாக இல்லை என்றால், நீங்கள் அதை தினமும் பயன்படுத்தலாம். கொத்தமல்லி விதைகளில் ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகள் மற்றும் உணவு நார்ச்சத்து உள்ளது. இது உங்கள் கல்லீரல் மற்றும் குடல்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
மல்லி விதைகளின் பிற நன்மைகள்
இது தவிர, மல்லி விதைகளின் நன்மைகள் இன்னும் ஏராளமாக உள்ளன. கொத்தமல்லி விதைகள் காலரா, டைபாய்டு, நச்சுத்தன்மை, பாக்டீரியா தொற்று (சால்மோனெல்லா), வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்சனைகளிலும் நிவாரணம் அளிக்கும். தனியாவில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மல்லி விதைகளின் உதவியுடன் இரத்த சோகையை அதாவது இரத்த குறைபாட்டை தடுக்கலாம். இது மட்டுமின்றி, சீரற்ற மதவிடாய் பிரச்சனையிலும் மல்லி விதைகள் நன்மை பயக்கும். இதற்கு, 2 ஸ்பூன் மல்லி விதைகளை அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியாக குறைந்த பின்னர், அதில் ஒரு ஸ்பூன் இனிப்பு சேர்க்கவும். இந்த மல்லி டீயை குடிக்கவும். இந்த தேநீரை தொடர்ந்து மூன்று முறை குடித்து வந்தால், ஹார்மோன் சமநிலையின்மையை சரிசெய்து, மாதவிடாய் காலங்களில் அதிக இரத்தப்போக்கு பிரச்சனையை தவிர்க்கலாம்.
தனியா கண் பிரச்சனையான கஞ்செக்டிவைட்டிஸிலும் (Conjunctivitis) நன்மை பயக்கும். இது மற்ற கண் பிரச்சனைகளையும் குறைக்கிறது. இதற்கு மல்லி விதை நீரில் கண்களை கழுவவும். முடிந்தவரை அடிக்கடி தனியா தண்ணீரில் கண்களைக் கழுவுவது நன்மை பயக்கும். கொத்தமல்லியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் கண்களின் சிவத்தல் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | யூரிக் ஆசிடை கட்டுப்படுத்த சூப்பர் டெக்னிக்! அமில சுரப்பை கட்டுப்படுத்தும் பாகற்காய்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ