வெள்ளரிக்காயில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த வெள்ளரிக்காயை பொதுவாக மக்கள் கோடை காலங்களில் அதிகம் உண்ண எண்ணுவார்கள். இதில் நிறைந்துள்ள நீர் சத்து உடலுக்கு உடனடியாகப் புத்துணர்ச்சியையும் சக்தியையும் தருகிறது. வெள்ளரிக்காயில் நீர் அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது சரியான உணவாக அமையும். தினமும் வெள்ளரிக்காயை உட்கொண்டால் தீவிரமான மலச்சிக்கலை நீக்கும். வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. இன்சுலின் சுரப்பதற்கு, கணையத்தில் உள்ள அணுக்களுக்கு தேவையான ஹார்மோன் ஒன்று வெள்ளரிக்காய் (Cucumber Juice) சாற்றில் உள்ளது. அதனால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு (Diabetes) பெரிதும் உதவுகிறது. 


2. வெள்ளரிக்காயில் உள்ள ஸ்டேரோல் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறையச் செய்யும். மேலும் அதிலுள்ள நார்ச்சத்து, பொட்டாசியம்  மற்றும் மெக்னீசியம் இரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.


ALSO READ | Cooking Tips: சூப்பரான வெள்ளரிக்காய்ப் பாயசம் செய்வது எப்படி? இப்படித்தான்…


3. சிலிகா என்ற அற்புதமான கனிமம் வெள்ளரிக்காயில் உள்ளதால், அவை நகங்கள் மற்றும் முடியை பளபளப்பாகவும் திடமாகவும் வைத்திருக்கும். மேலும் அதிலுள்ள சல்பரும், சிலிகாவும் முடியின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருக்கும். மேலும் தசை இணைப்புகளை திடமாக்கி மூட்டு ஆரோக்கியத்துக்கு  துணையாக நிற்கும். 


4. உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க வெள்ளரிக்காய் உதவுவதால், அவை சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.


5. வெள்ளரிக்காயில் உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து போன்றவை நிறைந்திருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் சுலபமாக உடலுக்கு ஊட்டச்சத்து கிடைத்து விடுகிறது.


6. வெள்ளரிக்காயில் வைரஸ், பாக்டீரியா மற்றும் இதர நுண்கிருமிகளை அழிக்கும் திறன் அதிகம் உள்ளன. தொற்று நோய்கள் ஏற்படாமல் நம்மை பாதுகாத்துகொள்ள தினமும் ஒரு வெள்ளரிக்காயாவாது சாப்பிடும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.


7. வெள்ளரிக்காயில் இருக்கும் சத்துகள் கண்களின் கருவிழிகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, அதீத வெப்பத்தால் கண்களில் இருக்கும் ஈரப்பதம் வறண்டு விடாமல் பாதுகாக்கிறது.


8. பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வு மாதவிடாய் ஆகும். இந்த மாதவிடாய் காலத்தில் சில பெண்களுக்கு உதிரப்போக்கு அதிகம் ஏற்படுகிறது. இச்சமயங்களில் வெள்ளரிக்காய்களை அதிகம் சாப்பிட்டு வர பெண்களின் மாதவிடாய் கருப்பை சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்குகிறது.


ALSO READ | அழகான மாசு மரு இல்லாத சருமத்திற்கான எளிய வீட்டுக் குறிப்புகள் இதோ..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR