அழகான மாசு மரு இல்லாத சருமத்திற்கான எளிய வீட்டுக் குறிப்புகள் இதோ..!!!

உங்கள் சருமம், அழகாக மின்னுவதற்கு அதிக செலவு செய்து ப்யூட்டி பார்லருக்கு போக வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. நமது வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பெருட்களை கொண்டே சருமத்தை சிறப்பாக பராமரிக்கலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 25, 2020, 10:52 PM IST
    வெள்ளரிக்காயில் பயோஆக்டிவ் தன்மை உள்ளது.
    மஞ்சளில் மிக அதிக அளவில், ஆண்டிமைக்ரோபையல் மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் பண்புகள் நிறைந்துள்ளது.
    தேன் உங்கள் சருமத்தின் pH அளவை சரியான் அளவை பராமரிக்கிறது.
அழகான மாசு மரு இல்லாத சருமத்திற்கான எளிய வீட்டுக் குறிப்புகள் இதோ..!!! title=

மெண்மையான, வழுவழுப்பான சருமத்தை பெறுவதற்கான எளிய வீட்டுக் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

உங்கள் சருமம், அழகாக மின்னுவதற்கு அதிக செலவு செய்து ப்யூட்டி பார்லருக்கு போக வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. நமது வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பெருட்களை கொண்டே சருமத்தை சிறப்பாக பராமரிக்கலாம். பொதுவாக  ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது சுத்தம் செய்வது  என்பொஅது சரும் பராமரிப்பில் மிக முக்கிய விஷயமாகும். உங்கள் முகத்தில் சேர்ந்துள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை அகற்ற இது உதவுகிறது. 

சுத்தமாக பராமரிப்பது தோல் பிரச்சினைகள் வருவதைத் தடுக்கிறது. உங்கள் சமையலறையில் இருக்கும் சில பொருட்கள் சரும பராமரிப்பிற்கு பெரிதும் உதவியாக இருக்கும். உங்கள் சருமத்திற்கு இயற்கையான மினுமினுப்பை வழங்கக் கூடிய பொருட்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

ALSO READ | பின் தூங்கி பின் எழும் பழக்கம் உள்ளவரா…. ஆஸ்துமா, அலர்ஜி வரும் ஜாக்கிரதை..!!!

மஞ்சள் மற்றும் கடலை மாவு

மஞ்சளில் மிக அதிக அளவில், ஆண்டிமைக்ரோபையல் மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் பண்புகள் நிறைந்துள்ளது. அவை முகப்பரு குறைத்து உங்கள் முகத்தில் உள்ள தளும்புகளை போக்கும். மேலும்,  பாக்டீரியா தொற்று, வீக்கம் மற்றும் பிற தோல் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. கடலை மாவு சிறந்த ஃபேஸ் பேக்காக செயல்படுகிறது. மாசு மரு இல்லாத சருமத்தைப் பெற,  2 தேக்கரண்டி கடலை மாவு, 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு சில துளிகள் பால் கலந்து, இந்த பேஸ்டை உங்கள் முகத்திலும் கழுத்திலும் தடவவும்.  பின்னர், 20 நிமிடங்கள் கழித்து, அதை தண்ணீரினால் சுத்தம் செய்ய வேண்டும். 

தயிர் மற்றும் வெள்ளரிக்காய்

உங்கள் முகத்தில் தயிர் பூசுவது உங்கள் சருமத்தை வழுவழுப்பாக்கும். அதேசமயம் வெள்ளரிக்காய் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்ற உதவும். அதன் பயோஆக்டிவ் தன்மை உங்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்டும். ஒரு சிறிய வெள்ளரிக்காயை எடுத்து அரைக்கவும். அதில் சுமார் 2 தேக்கரண்டி தயிர் சேர்க்கவும். அதை நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்தில் இந்த கலவையை தடவவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு இதனை கழுவ வேண்டும்.

ALSO READ | ஆக்சிஜன் அதிக அளவில் உள்ள உணவுப் பொருட்கள் கொரோனாவை விரட்டுமா?

தேன்

உங்கள் சரும அழகிற்கான, மிகச் சிறந்த சமையலறை பொருட்களில் தேன் ஒன்றாகும். இது உங்கள் சருமத்தின் pH அளவை சரியான அளவில் பராமரிக்கிறது. அதோடு சருமத்தில் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் சருமம் மிகவும் இளமையாக தோற்றமளிக்க உதவுகிறது. தேன் கலந்த கவவையை தயாரிக்க 3 தேக்கரண்டி தேனுடன் பால் கலக்க வேண்டும். பின்னர், அதை உங்கள் முகத்திலும் கழுத்திலும் தடவவும். 30 விநாடிகள் காத்திருந்து பின்னர் மெதுவாக உங்கள் முகத்தை ஸ்கரப் செய்யவும். நீங்கள் ஸ்க்ரப்பிங் செய்து முடித்த பிறகு தண்ணீரினால் சுத்தம் செய்யவும்.

ALSO READ | நம் சித்தர்கள் தந்த அற்புத யுக்தி..... கொரோனாவை துரத்தும் ஆற்றல் மிக்க சக்தி...!!!

மேலே கூறியுள்ள குறிப்புகளை தவறாமல் கடைபிடித்தால், உங்கள் சருமம் ப்யூட்டி பார்லர் போகாமலேயே மின்னும். ஃபேஷியல் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது.

Trending News