இந்தியாவில் தயிர் பெரும்பான்மையானோரின் விருப்ப உணவாக இருக்கிறது. தினமும் தயிர் எடுத்துக்கொள்ளாமல் அவர்களால் ஒரு நாளை நகர்த்த முடியாது. தயிர் மட்டுமின்றி லெஸ்ஸி உள்ளிட்ட தயிர் கலந்த பானங்களையும் பலர் விருப்புவர். பிரியாணியைக்கூட தயிர் பச்சடி இல்லாமல் யாரும் சாப்பிடுவதில்லை.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகளவில் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக கருதப்படும் தயிரை தினமும் எடுத்துக்கொண்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பின்வருமாறு:-


உடல் எடையை குறைக்கும்:


கார்டிசோல் ஹார்மோனின் ஏற்றத்தாழ்வு மற்றும் தவறான வாழ்க்கை முறை காரணமாக இடுப்பைச் சுற்றி அதிக கொழுப்பு சேரும். தயிரில் கால்சியம் நிறைந்துள்ளது. இது கார்டிசோலின் உற்பத்தியை குறைக்க உதவும். எனவே உடல் எடை குறையும். அதேபோல் தயிர் சாப்பிட்டால் நீண்ட நேரம் குடலுக்கு இதமாக இருக்கும். மேலும் கலோரி உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலம் தொப்பையை கட்டுப்படுத்தவும் உதவும்.


செரிமானம்:


தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகின்றன. தயிர் எளிதாக ஜீரணமாகக்கூடியது. மேலும் நொதித்தல் செயல்பாட்டின்போது லாக்டோஸ் உடைக்கப்படுவதால் குடல் ஆரோக்கியத்திற்கு தயிர் சிறப்பு வாய்ந்தது.


ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்:


தயிரில் உள்ள எளிதில் ஜீரணிக்கக்கூடிய புரதம், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. 'கிரீக் யோகர்ட்' எனப்படும் தயிர் இதய நோய் அபாயத்தை குறைப்பதாகவும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். இனிப்பு கலந்த தயிர் மற்றும் பழங்கள், பிற உணவு பொருட்கள் கலந்து தயாரிக்கப்படும் தயிர் வகைகளை தவிர்ப்பது நல்லது.


பற்கள் - எலும்புகளை வலிமையாக்கும்:


தயிரில் கலந்திருக்கும் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக்க உதவும். அதேபோல் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் தயிர் சிறந்த புரோபயாடிக் உணவுகளில் ஒன்றாகும். இது உடலுக்கு நன்மை பயக்கும் நேரடி நுண்ணுயிரிகளைக் கொண்டுள்ளது. 


புரோபயாடிக்குகள் பல நோய்த்தொற்றுகளை தடுக்கும் தன்மை கொண்டவை. ஒட்டுமொத்தமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தக்கூடியவை. சந்தையில் கிடைக்கும் அனைத்து தயிர்களும் புரோபயாடிக் தன்மை கொண்டவை அல்ல. அதன் லேபிளில் 'லைவ் ஆக்டிவ் கல்சர்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதை கவனித்து வாங்க வேண்டியது அவசியம்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR