Betel Benefits: ஆரோக்கியத்திற்கான நம்பர் 1 ஜூஸ்: விலையும் மலிவு
செரிமாணக்கோளாறுகளை சரிப்படுத்தும் வெற்றிலை கசாயத்தின் மருத்துவப் பண்புகள் அபாரமானவை. தலை முதல் கால் வரை சீராக்கும் வெற்றிலைச் சாற்றின் பயன்கள்
புதுடெல்லி: வெற்றிலை என்பது மங்களகரமானது என்று இந்தியாவில் கொண்டாடப்பட்டாலும், உண்மையில் அது நமது ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது.
பொதுவாக இந்தியாவில் ஆயுர்வேதம் மற்றும் வீட்டு வைத்தியம் மூலமே நோய்கள் குணமாக்கப்படுவதும், நோய்களை அண்டவிடாமல் பார்த்துக் கொள்ளும் பாரம்பரியம் தொன்றுதொட்டு வருவது.
இயல்பாக வீடுகளில் வளர்க்கப்படும் தாவரங்களே நமது ஆரோக்கியத்தை இயற்கையான முறையில் பாதுகாக்க உதவுகின்றன. வெற்றிலையை தினசரி உணவுக்கு பிறகு பயன்படுத்துவதால், வாயில் புத்துணர்ச்சி உண்டாகி, துர்நாற்றம் அகலும்.
புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்குண்டு என்பதால், தினசரி தாம்பூலமாக வெற்றிலையை உண்பது நல்லது.
மேலும் படிக்க | சர்வ நோய்களையும் விரட்டும் வெற்றிலை; தினமும் கண்டிப்பா போட்டுக்கோங்க
வெற்றிலையை பல காரணங்களுக்காக பயன்படுத்துகின்றனர். தாம்பத்தய உறவை மேம்படுத்த, ஆஸ்துமா, காசநோய்கள் இருந்தால் அவற்றை நீக்க மற்றும் செரிமாணக் கோளாறுகளை போக்க என பல்வேறு காரணங்களுக்காக வெற்றிலை பயன்படுத்தப்படுகிறது.
முக்கியமாக, வெற்றிலையுடன் சுண்ணாம்பு சேர்த்து தினசரி உணவுக்கு பிறகு உண்பதால், உடலில் இரத்த குறைபாடு நீங்கும், உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைத்துவிடும்.
வெற்றிலை மற்றும் இஞ்சியை இடித்து எடுக்கப்படும் சாறு, நுரையீரல் நோய்களுக்கும் உடனடி நிவாரணமாக அமையும். நாள் பட்ட நுரையீரல் நோய்களுக்கும் தீர்வாகும்.
வெற்றிலையை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து தினமும் தண்ணீருக்குப் பதிலாக பருகி வந்தால் பல்வேறு நோய்த்தொற்றுகளும் பயந்து ஓடிவிடும்.
வெற்றிலையை வெறும் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பது மிகவும் நல்லது. ஆனால், அதை கசாயம் போல் தயாரித்து குடித்துவந்தால் மிகவும் நல்லது. மிகச் சிறந்த வலி நிவாரணியாக செயல்படும் இந்த கசாயத்தை வாரத்தில் இரு முறை எடுத்துக் கொண்டால் உடல் புத்துணர்வுடன் இருக்கும்.
மேலும் படிக்க | தொண்டை வலியைப் போக்கும் தேநீரின் திகட்டாத மாயம்
வெற்றிலை கசாயம் செய்முறை:
தேவையான பொருட்கள்
வெற்றிலை - 1
மிளகு - 8
சீரகம் - ⅛ தேக்கரண்டி
கிராம்பு - 1
சுக்குப் பொடி - ¼ தேக்கரண்டி
தண்ணீர் - ½ கப்
வெற்றிலையை நன்றாக கழுவி சுத்தப்படுத்திக் கொண்டு அதை தண்ணீரில் சேர்த்து அடுப்பில் கொதிக்க விடவும். அதில் மிளகு, கிராம்பு சுக்கு தூள் சேர்க்கவும்.
மேலும் படிக்க | இந்த உணவுகளை சாப்பிட்டால் ஒல்லியாகலாம்: எடை குறைப்பு டிப்ஸ்
தண்ணீர் பாதியாக சுண்டும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும். பாதியாக சுண்டிய கசாயத்தை குளிர வைத்த பிறகு வடிகட்டி கசாயமாக குடிக்கவும்.
சுலபமாக உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கசாயம் இது. கூடுதலாக வாய் துர்நாற்றம் மற்றும் செரிமாணக் கோளாறுகளையும் போக்கும் அற்புதமான கசாயம் இது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR