கோடைகாலத்தில் நீங்கள் உணவுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். செரிமான பிரச்சனைகள் முதல் தோல் நோய்கள் வரை அதிகம் வரக்கூடிய இந்தக் காலக்கட்டத்தில் சரியான உணவுமுறையை பின்பற்றினால் நோய் ஆபத்துகளில் இருந்து தப்பிக்கலாம். பச்சைக் காய்கறிகளைப் பொறுத்தவரை உடலுக்கு எப்போதும் தீங்கானவைக் கிடையாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எந்த காலத்திலும் நீங்கள் வெண்டைக்காயை சாப்பிடலாம். அதனால், வெண்டைக்காயை கோடைகாலத்தில் சாப்பிடக்கூடாது என்ற எந்த விதிமுறையும் கிடையாது. வெண்டைக் காய் மட்டுமல்ல எந்த காய்கறிகளையும் நீங்கள் சாப்பிடலாம். நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம், ஏற்கனவே பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவரின் பரிந்துரைக்கு ஏற்ப சில காய்கறிகளை தவிர்க்கலாம் அல்லது குறைவாக சாப்பிடலாம். சரி, வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்வோம். 


மேலும் படிக்க | High BP: உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் சில உணவுகள்


கொலஸ்ட்ரால் குறையும்


மற்ற காய்கறிகளைப் போலவே வெண்டைக்காயிலும் நார்ச்சத்து நிறைந்துள்ளது, வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன வெண்டைக்காயில் கூடுதலாக பெக்டின் என்ற தனிமம் உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. கொலஸ்ட்ரால் சமநிலையில் இருந்தால் ​மாரடைப்பு அபாயம் குறைவு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 


சர்க்கரை கட்டுப்பாடு


வெண்டைக்காயை நீரிழிவு நோயாளிகள் பயப்படாமல் சாப்பிடலாம். இதில் அதிக நார்ச்சத்து உள்ளது என ஏற்கனவே கூறியிருக்கிறோம். அதனால், செரிமான அமைப்புகள் சரியாகும் நேரத்தில், ரத்த சர்க்கரை அளவையும் சீராக வைத்திருக்க உதவும்.


புற்று நோய் பாதிப்பு


மற்ற காய்கறிகளை விட வெண்டைக்காயில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும் வெண்டைக்காய்க்கு உண்டு. செரிமான மண்டலம் சீராக இருக்கும்போது வயிற்றில் புற்றுநோய் ஆபத்துகள் வராது. அதற்கு நீங்கள் வெண்டைக்காய் சாப்பிடலாம். 


மேலும் படிக்க | சர்க்கரை கொல்லியாக நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் சிறுகுறிஞ்சான்!


நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்


கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது மிகவும் முக்கியம். அத்தகைய சூழ்நிலையில், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை அன்றாட உணவுகளில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. இது உங்களை சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவும். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். )


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR