பச்சை இஞ்சி சாப்பிடுவதால் கிடைக்கும் பளிச் பயன்கள்
Health News: பச்சை இஞ்சியில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இது ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மைகளைத் தருகிறது.
பச்சை இஞ்சி உடல் ஆரோக்கியத்துக்கு பல பயன்களை அளிக்கின்றது. இதை உண்பதால், ஒற்றைத் தலைவலி மட்டுமின்றி, ரத்த அழுத்தம், வயிறு தொடர்பான நோய்களிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
இது தவிர, பச்சை இஞ்சி கொலஸ்ட்ரால் பிரச்சனையிலும் நன்மை பயக்கும். பச்சை இஞ்சியில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இது ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மைகளைத் தருகிறது. பச்சை இஞ்சியில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி போன்ற வைட்டமின்கள், இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை சாப்பிடுவதால் பல நோய்கள் குணமாகும். மறுபுறம், பச்சை இஞ்சியை உட்கொள்வதன் மூலம், சளி மற்றும் இருமல் போன்ற வைரஸ் தொற்றுகளையும் பெருமளவில் தவிர்க்கலாம்.
ஆண்கள் இந்த நன்மையைப் பெறுகிறார்கள்
ஆண்களுக்கு ஏதேனும் பாலியல் பிரச்சனைகள் இருந்தால், அவர்கள் பச்சையாக இஞ்சியை சாப்பிடலாம். ஏனெனில் பச்சையாக இஞ்சி சாப்பிடுவது ஆண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று நம்பப்படுகிறது.
வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு நிவாரணம்
பச்சை இஞ்சி வயிற்றுக்கும் மிகவும் நன்மை பயக்கும். இஞ்சி செரிமான அமைப்பையும் பலப்படுத்துகிறது. மேலும், வயிற்று வலி, வயிற்று பிடிப்பு போன பிரச்சனைகள் உள்ளவர்கள், பச்சையாக இஞ்சியை சாப்பிட வேண்டும். வயிறு தொடர்பான பல பிரச்சனைகளுக்கு பச்சை இஞ்சி பெரிய நிவாரணமாக அமையும்.
மேலும் படிக்க| மார்பக புற்றுநோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
ஒற்றைத் தலைவலி பிரச்சனைக்கு தீர்வு
மைக்ரேன் வலிக்கும் பச்சை இஞ்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பச்சை இஞ்சி ஒற்றைத் தலைவலிக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஒருவருக்கு ஒற்றைத் தலைவலி புகார் இருந்தால், அவர் தினமும் பச்சையாக இஞ்சியை சாப்பிட வேண்டும். பச்சை இஞ்சியை சாப்பிடுவதால் சோர்வு குறையும் என்று நம்பப்படுகிறது.
கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது
கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதில் பச்சை இஞ்சியும் முக்கியப் பங்காற்றுகிறது. இஞ்சியை உட்கொள்வதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கலாம். ஒருவருக்கு கொலஸ்ட்ரால் புகார் இருந்தால், அவர் தினமும் பச்சை இஞ்சியை உட்கொள்ள வேண்டும். இது தவிர, பச்சை இஞ்சி இதயத்திற்கும் நன்மை பயக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் பரிந்துரையாகவோ அல்லது சிகிச்சைக்கான மாற்றாகவோ இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.)
மேலும் படிக்க | போலி பெருங்காயத்தால் பெரிய பாதிப்பு ஏற்படும்: போலியை கண்டுபிடிப்பது எப்படி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR