வெள்ளரிக்காய் கோடையின் சூப்பர் உணவுகளில் ஒன்றாகும். இது உடலை குளிர்விப்பதோடு, நீர் சத்து பற்றாக்குறை ஏற்பட ஒருபோதும் அனுமதிக்காது. வெள்ளரிக்காய் உடலுக்கு தேவையான நீர் சத்தை வழங்குவதோடு, அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு நன்மை பயக்கும். அதனால்தான் மக்கள் கோடையில் வெள்ளரியை விரும்பி சாப்பிடுவார்கள்.
எனினும் நீங்கள் வெள்ளரிக்காய் சாப்பிடும் போது செய்யும் சிறு தவறு காரணமாக, அதிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்தை நீங்கள் முழுமையாக பெற முடியாது.
வெள்ளரி சாப்பிட்டவுடன் இந்த தவறை செய்யாதீர்கள்
வெள்ளரிக்காய் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காது. இது தவிர, செரிமான செயல்முறையும் மிகவும் பாதிக்கப்படுகிறது. வைட்டமின்-சி, கே, மக்னீசியம், காப்பர், பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் வெள்ளரிக்காயில் உள்ளன. ஆனால் வெள்ளரிக்காய் சாப்பிட்ட பிறகு, தவறுதலாக கூட தண்ணீர் குடிக்கக் கூடாது. இதனால் ஏற்படும் பாதிப்பை அறிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!
வெள்ளரிக்காய் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்
1. உண்மையில், 95% வெள்ளரிக்காயில் தண்ணீர் மட்டுமே உள்ளது. இது தவிர, நாம் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து சத்துகளும் இதில் உள்ளன. இதன் காரணமாக, தோல் மற்றும் முடி எப்போதும் புத்துணர்வுடன் இருக்கும். ஆனால் வெள்ளரிக்காயில் தண்ணீர் குடித்தால், உடலுக்கு இந்த சத்துக்கள் கிடைக்காது.
2. வெள்ளரிக்காய் சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் குணமாகும். ஆனால் வெள்ளரிக்காய் சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால்,வயிற்று போக்கு பிரச்சனை வரலாம். எனவே, வெள்ளரிக்காய் சாப்பிட்ட அரை மணி நேரம் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கவும்.
3. வெள்ளரிக்காய் மட்டுமல்ல, நீர்ச்சத்து நிறைந்த எந்தப் பழம் அல்லது காய்கறிகளிலும் தண்ணீர் குடிக்கக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே, நீங்கள் தர்பூசணி, அன்னாசிப்பழம் சாப்பிடுகிறீர்கள் என்றால், தண்ணீரைத் தவிர்க்கவும்.
4. எந்த உணவையும் ஜீரணிக்க, குடலில் pH அளவு தேவைப்படுகிறது, ஆனால் வெள்ளரிக்காய் சாப்பிடுவதன் மூலமோ அல்லது தண்ணீரைக் குடிப்பதன் மூலமோ, இந்த pH அளவு பலவீனமடைகிறது, மேலும் செரிமானத்திற்கு தேவையான அமிலம் போதுமான அளவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை.
5. வெள்ளரிக்காய் அல்லது ஏதேனும் பச்சைக் காய்கறிகளின் முழுப் பலனையும் உங்கள் உடல் பெற வேண்டுமெனில், அவற்றை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | முகத்தின் அழகை சீர்குலைக்கும் ‘கருவளையங்களை’ விரட்ட சில எளிய டிப்ஸ்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR