Guavas Health Benefits: கொய்யா, ஆப்பிளை விட சத்துக்களில் உயர்ந்த பழம். எனவே, ஊட்டசத்துக்களின் களஞ்சியமாக இருக்கும் கொய்யா பழத்திற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கொய்யாப்பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. கொய்யாவில் வைட்டமின் சி, நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், லைகோபீன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொய்யாப்பழத்தினை அடிக்கடி உட்கொண்டால், நரம்பு தளர்ச்சி முதல் கண் பிரச்சனைகள் மூதல் பல்வேறு நோய்களுக்கு தீர்வாக அமைவதோடு, மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது.


நரம்பு மண்டல ஆரோக்கியம்


கொய்யாப்பழத்தில் மெக்னீசியம் நிறைந்துள்ளது. நரம்புகள் மற்றும் தசைகளை தளர்த்த உதவும் முக்கியமான ஊட்டச்சத்து மெக்னீசியம். கொய்யாப்பழத்தில் உள்ள ஃபோலிக் அமிலம் அல்லது வைட்டமின் பி-9 குழந்தையின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்து. எனவே, நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளை நரம்பியல் கோளாறுகளிலிருந்து பாதுகாக்க அடிக்கடி இதனை உட்கொள்ள வேண்டும். மன அழுத்தத்தை (Health Tips) எதிர்த்துப் போராடுபவர்களுக்கும், கொய்யா மிகவும் நல்லது. 


இரத்த சர்க்கரை அளவு


நீரிழிவு நோயாளிகள் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ள பழங்களை சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்நிலையில், கொய்யாப்பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். கொய்யா மட்டுமின்றி, அதன் இலைகள் சேர்த்து கொதிக்க வைத்த நீர் சர்க்கரை நோய்க்கு அருமருந்து.இது தவிர, கொய்யா சாப்பிடுவதால் உடல் எடை குறைவதுடன், உடலில் இன்சுலின் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.


செரிமானம் தொடர்பான பிரச்சனை


கொய்யாப்பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிறு மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இது மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. உணவில் நார்ச்சத்து இல்லாததால் தான் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்களில் கொய்யாவும் ஒன்று. நார்ச்சத்து பெருங்குடலை சுத்தம் செய்கிறது. குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது.


இளமையை காக்கும் கொய்யா


முதுமை என்பது தவிர்க்க முடியாதது தான். ஆனால், தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதன், முதுமை எளிதில் அண்டாமல் ஒத்தி போடலாம். கொய்யாப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சரும சுருக்கங்களை நீக்கி இளமையாக இருக்க உதவுகிறது.


உடல் பருமன்


நார்சத்து நிறைந்த கொய்யாப்பழம் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த தேர்வு. இதில் கலோரிகளும் மிகக் குறைவு.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உடல் எடையை எளிதாக குறைக்கணுமா? உங்களுக்கு உதவும் மஞ்சள் காபி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ