விந்தணுவின் அளவைத் தவிர, விந்தணுவின் தரமும் மிகவும் முக்கியமானது. அதாவது, உங்கள் விந்தணு எண்ணிக்கை எவ்வளவு நன்றாக இருந்தாலும், அதன் தரம் சிறப்பாக இல்லை என்றால் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அப்படியான சூழலில், நீங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த விரும்பினால், உங்கள் வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். இந்த மாற்றம் உங்கள் வாழ்க்கையில் மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒன்றாக இருக்க வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போது, பெரும்பாலானோருக்கு மன அழுத்தம் காரணமாக பாலியல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால் விந்தணு மற்றும் விந்தணுக்களின் தரத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துங்கள். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.  


மேலும் படிக்க | உடலுறவுக்குப் பிறகு உடனடியாக சிறுநீர் கழிப்பது எவ்வளவு முக்கியம்?


சாக்லேட் 


நீங்கள் டார்க் சாக்லேட்டை சாப்பிடுங்கள். இதன் மூலம் உங்கள் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கலாம். சாக்லேட்டில் அதிக அளவு கோகோ மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும் அளவுக்கதிகமாக சாப்பிட வேண்டாம். அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது விந்தணு எண்ணிக்கையை குறையவும் வாய்ப்புகள் உள்ளது. 


மாதுளை


மாதுளை விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. அத்துடன் விந்தணுக்களின் தரத்தையும் மேம்படுத்தும். எண்ணற்ற நன்மைகளைக் கொண்ட மாதுளை பழத்தை நீங்கள் தினமும் சாப்பிடுவது சாலச் சிறந்தது. ஜூஸாகவும் சாப்பிடலாம். தினந்தோறும் சாப்பிடும் உணவிலும் சேர்த்து சாப்பிடலாம். தயிருடன் மாதுளையை சேர்த்து சாப்பிட்டால் ருசி சூப்பராக இருக்கும்.


அஸ்வகந்தா


பாலியல் ஆசை இல்லாமை திருமண வாழ்க்கையில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு பாலியல் ஆசை குறைந்தாலோ அல்லது குறைந்த விந்தணு எண்ணிக்கை இருந்தாலோ, ஆயுர்வேதத்தின் மூலம் சிகிச்சை செய்யலாம். அஸ்வகந்தா பாலியல் ஆசை, விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க சிறந்ததாக கருதப்படுகிறது. அஸ்வகந்தா ஆண்களின் உடல் பலவீனத்தையும் நீக்குகிறது.


முட்டை 


வைட்டமின் ஈ முட்டையில் அதிக அளவில் காணப்படுகிறது. இது விந்தணுவின் இயக்கத்தை அதிகரிக்கும். முட்டையில் துத்தநாகத்தின் அளவும் அதிகமாக இருப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கை கூடும். வேகவைத்த முட்டையை காலையில் சாப்பிடலாம். முட்டையில் புரதச்சத்து அதிகம். 


இவற்றையெல்லாம் சாப்பிட்டு விந்தணு தரம் மற்றும் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் உடல் பலவீனம் குறைந்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 


மேலும் படிக்க | குழந்தை பெற்றுக்கொள்ள ஆண்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR