Best Calcium Rich Foods: நம் உடலின் ஆரோக்கியம் மற்றும் வலிமை மிகுந்த செயல்பாட்டிற்கு கால்சியம் மிக அவசியம். இது எலும்புகள், பற்கள் என உடலில் சில முக்கிய பாகங்களுக்கு தேவையான சக்தியை அளிக்கின்றஹது. பால் கால்சியத்தின் மிகச்சிறந்த மூலமாக கருதப்படுகின்றது. பால் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான உணவு என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆகையால் சிறுவயது முதலே தினமும் பால் குடிக்க அறிவுறுத்தப்படுகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயற்கையான பானமான பால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் உள்ள கால்சியம் (Calcium), எலும்புகளுக்கு வலுவை அளிப்பதோடு, பல நோய்களில் இருந்தும் நம்மை காக்கிறது. ஆனால், அனைவருக்கும் பால் பிடிப்பதில்லை. சிலருக்கு பாலால் ஒவ்வாமையும் ஏற்படுகின்றது. அப்படிப்பட்டவர்கள் கால்சியத்துக்கான தேவையை எப்படி பூர்த்தி செய்து கொள்வது? பாலுக்கு மாற்றாக கால்சியம் அளிக்கும் உணவுகள் எவை? 


கால்சியம் சத்து கிடைக்க பால் (Milk) தான் குடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ் தெரிவித்துள்ளார். இயற்கையான வழியில் உடலில் கால்சியம் தேவையை பூர்த்தி செய்யும் சில உணவுகளை பற்றி அவர் கூறியுள்ளார். அவற்றை பர்றி இங்கே காணலாம். 


பால் தவிர உடலுக்கு கால்சியம் சத்தை அளிக்கும் உணவுகள்:


1. ஆரஞ்சு


ஆரஞ்சு (Orange) மிகவும் பொதுவான ஒரு பழமாகும். பொதுவாக ஆரஞ்சு பழத்தை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி பெற உட்கொள்வது வழக்கம். ஆனால் இந்த பழத்தின் சாற்றை குடித்தால், உடலில் கால்சியம் குறைபாடு சரியாகும் என்பது பலருக்கு தெரிவதில்லை. கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஆரஞ்சு சாறு குடிக்கலாம். 


மேலும் படிக்க | நரம்பு தளர்ச்சி முதல் இதய நோய் வரை... அற்புதங்கள் செய்யும் சின்னஞ்சிறு கசகசா..


2. ஓட்ஸ்


ஓட்ஸ் (Oats) மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவாக உள்ளது. இது ஒரு சிறந்த காலை உணவாக கருதப்படுகின்றது. அதில் கால்சியம் அதிகமாக உள்ளது. இது உடலுக்கு தேவையான ஊடச்சத்தை அளிப்பதுடன் கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது. ஆகையால் பால் பிடிக்காத அல்லது ஒவ்வாமை உள்ளவர்கள் கண்டிப்பாக ஓட்ஸ் உட்க்கொள்ளாலாம். 


3. சூரிய ஒளி


வைட்டமின் டி பெற சூரிய ஒளி (Sunlight) அவசியம் என்பது நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால், சூரிய ஒளி மூலம் கால்சியம் சத்தையும் பெறலாம் என்பது பலருக்குத் தெரியாது. கேல்சியம் குறைபாடு உள்ளவர்கள் தினமும் உடலில் குறிப்பிட்ட நேரத்திற்கு சூரிய ஒளி படும்படி செய்தால், இந்த குறைபாடு நீங்கும். 


4. பச்சை இலை காய்கறிகள்


பச்சை இலைக் காய்கறிகள் (Green Leafy Vegetables) எப்போதும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இவற்றில் பல வித ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன. பல்வெறு வைட்டமின்கள், மினரல்கள், இரும்புச்சத்து ஆகியவற்றுடன் இவற்றில் கால்சியமும் உள்ளது. கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் தினமும் கீரை வகைகள் மற்றும் பிற பச்சை இலை காய்கறிகளை உட்கொள்ளலாம். 


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Anti-Ageing Tips: 60+ வயதிலும்... இளமையாக இருக்க... நீங்கள் சாப்பிட வேண்டியவை..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ