Liver Health: கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எளிய உணவுகள்
Best Foods For Liver Health: கல்லீரல் ஆரோக்கியத்திற்குச் சிறந்ததாகக் கருதப்படும் சில உணவுப் பொருட்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Best Foods For Liver Health: நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் நமது உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு பங்களிக்கின்றன. சில உறுப்புகள் மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றன. அவற்றில் கல்லீரலும் ஒன்று. கல்லீரல் நமது உடலில் பல முக்கியமான பணிகளை செய்கின்றது.
கல்லீரல் உடலில் உள்ள நச்சுகளை அகற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது செரிமானத்திற்கு உதவுவதோடு உடல் முழுதும் ஆற்றல் சக்தியை எடுத்துச்செல்வதில் பங்களிக்கின்றது. கல்லீரல் பாதுகாப்பை உறுதி செய்ய, சரியான உணவைத் தேர்ந்தெடுத்து உட்கொள்வது மிக அவசியம். கல்லீரல் ஆரோக்கியத்திற்குச் சிறந்ததாகக் கருதப்படும் சில உணவுப் பொருட்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மஞ்சள்
மஞ்சள் சமையலில் பயன்படுத்தப்படுவதோடு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு முக்கிய அம்சமாகவும் உள்ளது. மஞ்சளில் குர்குமின் என்ற சக்திவாய்ந்த கலவை உள்ளது. இது கல்லீரலுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. குர்குமினில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் அதிகம் உள்ளன. இவை கல்லீரலின் வீக்கத்தைக் குறைக்கவும், நச்சுப் பொருட்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன. மஞ்சளை தொடர்ந்து சரியான அளவில் உட்கொள்வதால், கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தலாம். இதை பல வித உணவுகளை செய்யும்போது அவற்றில் சேர்க்கலாம், அல்லது சூடான பாலில் கலந்து குடிக்கலாம்.
மேலும் படிக்க | ஒல்லி பெல்லி உடம்பு வேண்டுமா? காலையில் இந்த பச்சை ஜூஸ் குடிச்சா போதும்
பீட்ரூட்
பீட்ரூட்டில் பீடைன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன. இவை கல்லீரலில் உள்ள நச்சுகளை நீக்க உதவுகின்றன. பீட்ரூட்டில் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. இரத்தசோகை பிரச்சனையை சரி செய்யவும் பீட்ரூட் உதவுகிறது.
பச்சை இலை காய்கறிகள்
பச்சை காய்கறிகள், வெந்தயக்கீரை, பாலக் கீரை போன்ற கீரை வகைகள் கல்லீரலுக்கு அதிக அளவில் நன்மை பயக்கும். அவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன. இவற்றில் உள்ள சத்துகள் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தி நச்சுகளை அகற்ற உதவுகின்றன.
அக்ரூட் பருப்புகள்
அக்ரூட் பருப்புகளில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன. அவை கல்லீரல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தைக் குறைக்கவும் கல்லீரலின் நச்சுத்தன்மையை அகற்றவும் உதவுகின்றன. தினமும் சில அக்ரூட் பருப்புகளை உட்கொள்வது கல்லீரல் ஆரோகியத்திற்கு நல்லது.
கிரீன் டீ
கிரீன் டீயில் உள்ள கேடசின்கள் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கேடசின்கள் கல்லீரல் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. இதுமட்டுமின்றி இவை பாதிக்கப்பட்ட செல்களை சரிசெய்யவும் உதவுகின்றன. தினமும் கிரீன் டீ =ஐ உட்கொள்வதால் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வைட்டமின் பி12 குறைபாட்டை சரி செய்ய சுலபமான வழி... இந்த பழங்களை சாப்பிடுங்க போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ