விடாமல் வரும் இருமலை விரட்ட உதவும் வீட்டு வைத்தியங்கள்
Home Remedies For Cough: சில எளிய, இயற்கையான வழிகளில் இருமலை சரிசெய்யலாம். இருமலைப் போக்க உதவும் சில அற்புதமான வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Home Remedies For Cough: பருவநிலை மாறும்போது நம் உடல்நிலையும் மாறுவது இயல்புதான். வெயில், மழை, குளிர் என மாற்றம் ஏற்படும் வேளைகளில் நாம் சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சல், வைரஸ் தொற்றுகள் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகிறோம். குறிப்பாக, இப்படிப்பட்ட நேரங்களில், இருமல் பலரை வாட்டும் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. பரும மாற்றத்தின் போது அதன் ஆபத்து மிகவும் அதிகமாகிறது. ஏனெனில் இந்த நேரத்தில் வைரஸ் தொற்று அதிகரிக்கிறது.
இருமல் அதிகமானால், நமது அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், நம்மை சுற்றியுள்ள மக்களுக்கும் இது பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஏனெனில் நமது இருமல் காரணமாக மற்றவர்களும் தொற்றுநோய்க்கு ஆளாகலாம். ஆகையால், ஒருவருக்கு இருமல் பிரச்சனை ஏற்பட்டால், அதை உடனடியாக சரி செய்துகொள்வது நல்லது. சில எளிய, இயற்கையான வழிகளில் இருமலை சரிசெய்யலாம். இருமலைப் போக்க உதவும் சில அற்புதமான வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இருமலை போக்கும் வீட்டு வைத்தியங்கள
சூடான நீர் மற்றும் உப்பு
ஒரு டீஸ்பூன் உப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து தொண்டையில் படும்படி நன்றாக கொப்பளித்தால் தொண்டை வீக்கம் குறைந்து, தொண்டையில் கட்டியுள்ள சளியும் கரையும். இதன் மூலம் இருமலுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். இந்த தீர்வு அதிகரிக்கும் இருமல் பிரச்சனையை குறைக்க உதவும்.
மஞ்சள் மற்றும் பால்
ஒரு கிளாஸ் சூடான பாலில் அரை டீஸ்பூன் மஞ்சளை கலந்து குடித்து வந்தால் தொண்டை வீக்கம் குறைந்து, இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருமலை குணப்படுத்த உதவும். இது சளி பிரச்சனைக்கும் தீர்வாக அமையும்.
மேலும் படிக்க | நோய் எதிர்ப்பு சக்தியை காலி செய்து... நோயாளியாக்கும் சில ஆபத்தான பழக்கங்கள்
தேன் மற்றும் பூண்டு
தேன் மற்றும் பூண்டு கலவையும் இருமலைக் குறைக்க உதவும். இவற்றின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தொண்டை நோய்த்தொற்றைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த கலவை நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
இஞ்சி மற்றும் தேன் தேநீர்
இஞ்சி மற்றும் தேன் கொண்டு தயாரிக்கபப்டும் தேநீர் இருமலைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தொண்டை வீக்கத்தைக் குறைக்கும். தேன் இருமலைக் குணப்படுத்த உதவும்.
சுக்குமல்லி
தனியா விதைகள் மற்றும் சுக்கின் பொடியான சுக்குமல்லி பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பது இருமல்லுக்கு உடனடி நிவாரணத்தை அளிக்கும். இதை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பதால் சளி பிரச்சனையும் குணமாகும்.
பாலில் தேன்
இரவில் தூங்கும் போது மிதமான சூடு பாலில் தேன் கலந்து குடித்து வந்தால், இருமல் பிரச்சனையில் நல்ல நிவாரணம் காணலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடல் பருமனால் ஆண்களுக்கு வரும் அபாயகரமான நோய்கள் இவைதான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ