வைட்டமின் டி குறைபாட்டை போக்க உதவும் மேஜிக் மூலிகைகள்: இப்படி சாப்பிடுங்க
Vitamin D Supplements: பொதுவாக வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து பெறப்படுகிறது. ஆனால் பலர் போதுமான சூரிய ஒளியைப் பெற முடியாத நிலையில் உள்ளனர்.
Vitamin D Supplements: நமது உடலின் சீரான செயல்பாட்டிற்கு பல வித வைட்டமின்கள் தேவைப்படுகின்றன. இவற்றில் வைட்டமின் டி -யும் ஒன்று. நமது உடலால் வைட்டமின் டி -ஐ தானாக உற்பத்தி செய்ய முடியாது. வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால், அதை சரி செய்ய, உணவுகள் மற்றும் சூரிய ஒளி தேவைப்படுகிறது. ஆரோக்கியமான உடலுக்கு இந்த வைட்டமின் போதுமான அளவில் உடலில் இருப்பது மிகவும் முக்கியமாகும். எலும்பு ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து பெறப்படுகிறது. ஆனால் பலர் போதுமான சூரிய ஒளியைப் பெற முடியாத நிலையில் உள்ளனர். அப்படிப்பட்டவர்கள் சில ஆயுர்வேத மூலிகைகளின் மூலமாக வைட்டமின் டி குறைபாட்டை (Vitamin D Deficiency) பூர்த்தி செய்துகொள்ளலாம். இவை அனைத்தும் இந்திய சமையலறைகளில் எளிதாக கிடைக்கக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள் அதை சரி செய்ய பயன்படுத்தக்கூடிய 5 மூலிகைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
வைட்டமின் டி குறைபாட்டை போக்க உதவும் மேஜிக் மூலிகைகள்:
மஞ்சள் (Turmeric)
மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்ட் பண்புகள் அதிகமாக உள்ளன. மஞ்சளை உட்கொள்வது உடலில் வைட்டமின் டி தொகுப்பை அதிகரிக்க உதவும். மஞ்சளை உணவுகளை சமைக்கும் போது பயன்படுத்துவது மட்டுமல்லாமல், பாலுடனும் தேநீருடனும் கலந்து உட்கொள்ளலாம். இதனை தொடர்ந்து உட்கொள்வதால் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.
துளசி (Tulsi)
துளசி பல வித மருத்துவ பண்புகள் நிறைந்த தாவரமாகும். இதன் இலைகள் உடலின் வளர்சிதை மாற்றத்தை சமநிலைப்படுத்தவும், வைட்டமின் டி அளவை அதிகரிக்கவும் உதவுகின்றன. துளசி இலைகளை தேநீரில் கலந்து குடிப்பது வைட்டமின் டி அளவை உடனடியாக அதிகரிக்க உதவுகிறது.
மேலும் படிக்க | சுகர் லெவலை சுபலமா குறைக்க... இந்த இலைகளை மென்று சாப்பிடுங்க போதும்
கிலோய் (Giloy)
சீந்தில் எனப்படும் கிலோய் பல வித ஆரோக்கிய நன்மைகளை தன்னிடத்தில் கொண்டுள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடவும், உடலில் தேவையான ஊட்டச்சத்துக்களின் சமநிலையை பராமரிக்கவும் உதவுகிறது. இவை மட்டுமின்றி, கிலோய், வைட்டமின் டி -இன் சரியான அளவை பராமரிக்கும் திறன் கொண்டது. இதை டிகாஷன் அல்லது சாறு வடிவில் உட்கொள்ளலாம்.
அஸ்வகந்தா (Ashwagandha)
அஸ்வகந்தா ஒரு ஆயுர்வேத மூலிகையாகும். இது மன அழுத்தத்தைக் குறைக்கவும், ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது. அஸ்வகந்தாவில் வைட்டமின் டியின் தொகுப்புக்கு உதவும் பண்புகள் அதிகமாக உள்ளன. இதை தூள் வடிவில் பால் அல்லது தண்ணீருடன் கலந்து குடிக்கலாம். அஸ்வகந்தாவை இப்படி தொடர்ந்து உட்கொள்வது உடலில் வைட்டமின் டி அளவை அதிகரிக்க உதவுகிறது.
எள் (Sesame Seeds)
எள்ளில் அதிக அளவில் வைட்டமின் டி உள்ளது. மேலும், இவற்றில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், புரதம் மற்றும் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளன. எள் உட்கொள்வது எலும்புகளை வலுப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும். இதை பல வித உணவு வகைகளில் சேர்த்து உட்கொள்ளலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ