சுகர் லெவலை சுபலமா குறைக்க... இந்த இலைகளை மென்று சாப்பிடுங்க போதும்

Diabetes Control Tips: நீரிழிவு நோய் ஒருமுறை வந்து விட்டால், அதை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது என்பது ஒரு கசப்பான உண்மை. எனினும், சரியான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை கொண்டு இதை கண்டிப்பாக கட்டுக்குள் வைக்கலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 15, 2024, 10:06 AM IST
  • இரத்த சர்க்கரை அளவை சில இயற்கையான வழிகளில் கட்டுக்குள் வைக்கலாம்.
  • அவற்றில் ஒரு வழி சில இலைகளை பயன்படுத்துவதாகும்.
  • சில இலைகளை மென்று சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.
சுகர் லெவலை சுபலமா குறைக்க... இந்த இலைகளை மென்று சாப்பிடுங்க போதும் title=

Diabetes Control Tips: இன்றைய அவசர வாழ்வில், பல வித நோய்கள் நம்மை ஆட்கொள்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது நீரிழிவு நோய். உலகம் முழுவதும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதுவும் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எணணிக்கை மிக அதிகமாக உள்ளது. இந்தியா நீரிழிவு நோயின் தலைநகரம் என அழைக்கப்படுவதற்கு இதுவே காரணம்.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, தவறான உணவுமுறை ஆகியவை நீரிழிவு நோய்க்கு முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகின்றன. ஒரு காலத்தில் முதியவர்களிடையேதான் நீரிழிவு நோய் (Diabetes) அதிகமாக காணப்பட்டது. ஆனால், இன்றைய காலகட்டத்தில், வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரிடமும் இதை காண முடிகின்றது. நீரிழிவு நோய் ஒருமுறை வந்து விட்டால், அதை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது என்பது ஒரு கசப்பான உண்மை. எனினும், சரியான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை கொண்டு இதை கண்டிப்பாக கட்டுக்குள் வைக்கலாம். 

சர்க்கரை நோயை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தாவிட்டால், இதயம், இரத்த அழுத்தம், சிறுநீரகம், கண்கள் ஆகியவை பாதிக்கப்படலாம். இரத்த சர்க்கரை அளவை (Blood Sugar Level) சில இயற்கையான வழிகளில் கட்டுக்குள் வைக்கலாம். அவற்றில் ஒரு வழி சில இலைகளை பயன்படுத்துவதாகும். சில இலைகளை மென்று சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம். இந்த இலைகள் இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த சர்க்கரை அலவை கட்டுப்படுத்த உதவுகின்றன. 

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் இலைகள்:

வெந்தயக்கீரை (Fenugreek)

வெந்தய கீரையில் பல வித மருத்துவ குணங்கள் உள்ளன. வெந்தயம் சுகர் நோயாளிகளுக்கு மிக உதவியாக இருக்கும். வெந்தயக் கீரை, வெந்தய விதைகள், வெந்தய பொடி என அனைத்தும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். இதை எளிதாக வீட்டில் ஒரு சிறு தொட்டியில் வளர்க்கலாம். இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். 

மேலும் படிக்க | பழங்களை எந்த நேரத்தில் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது...? ஊட்டச்சத்து நிபுணர் சொல்லும் டிப்ஸ்

கற்றாழை (Aloe Vera)

கற்றாழை மருத்துவ குணங்கள் நிறைந்த தாவரமாக உள்ளது.  கற்றாழையில் இரத்தச் சர்க்கரை அளவை குறைக்கும் பண்புகள் உள்ளன. காலையில் வெறும் வயிற்றில் இதனை உட்கொள்வதால் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கலாம் என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

வேப்பிலை (Neem)

வேப்பிலையில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதில் அதிக அளவில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும் உதவுகின்றது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேப்பிலை பெரிய அளவில் உதவுகின்றது.  காலையில் வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கலாம். 

இன்சுலின் செடி இலை (Insulin Plant)

இன்சுலின் செடியின் அறிவியல் பெயர் Costus igneus. இதன் இலைகளில் பல வித மருத்துவ குணங்கள் உள்ளன. இதனை தொடர்ந்து உட்கொள்வதால் இரத்த குளுக்கோஸ் அளவு கட்டுக்குள் இருக்கும் என கூறப்படுகின்றது. வீட்டு முற்றத்திலும் இந்த செடியை வளர்க்கலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த 5 உணவுகளை சாப்பிட்டால்... உடனே தண்ணீர் குடிக்காதீங்க...

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News