சில எளிய பிராணாயாம பயிற்சிகள்... பிபி, சுகர், கொலஸ்ட்ரால் எல்லாமே கட்டுக்குள் இருக்கும்
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, நீரிழிவு, கொலஸ்ட்ரால், பிபி ஆகியவற்றை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். சில பிராணாயாம பயிற்சிகள் நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் ஆகியவை பலருக்கு இருக்கும் பொதுவான பிரச்சனையாக ஆகி விட்டன உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால், சிறுநீரகம், இதயம், இரத்த அழுத்தம் அல்லது கண்பார்வை இழப்பு போன்ற பாதிப்புகள் உள்ளன. பிபி, கொலஸ்ட்ரால் பிரச்சனை காரணமாக மாரடைப்பு அபாயம் அதிகரிக்கிறது.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, நீரிழிவு, கொலஸ்ட்ரால், பிபி ஆகியவற்றை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். சில பிராணாயாம பயிற்சிகள் நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை (Health Tips) மேம்படுத்தும். அந்த வகையில் தினமும் செய்ய வேண்டிய சில எளிய யோகாசனங்களை அறிந்து கொள்வோம்.
அனுலோம் விலோம் பிராணயாமம்: இந்த பிராணயாமம் செய்வது நாள்பட்ட நோய்கள், மன அழுத்தம், மன ோர்வு ஆகியவாற்றை நீக்குவதுடன் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக கருதப்படுகிறது. இது தவிர, இது தசை மண்டலத்தையும் ஆரோக்கியமாக வைக்கிறது. இதை 10 முதல் 15 நிமிடங்கள் செய்யவும்.
பாஸ்த்ரிகா பிராணயாமம்: இந்த பிராணயாமம் செய்வதன் மூலம், ஆக்ஸிஜன் உடல் முழுவதும் சரியாகப் பாய்கிறது. இதன் காரணமாக நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படுவதுடன், இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மேலும் பல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
மேலும் படிக்க | சிறுநீரக பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி? இவற்றில் கவனம் செலுத்தினால் போதும்
பிரமரி பிராணயாமம்: இந்த பிராணயாமம் செய்ய, முதலில் சுகாசனம் அல்லது பத்மாசன நிலையில் அமரவும். இப்போது உள்ளே ஆழ்ந்து மூச்சு விட்டு, உள்ளிழுத்த பிறகு, முதலில் உங்கள் விரல்களை உங்கள் நெற்றியில் வைக்கவும். இதில் 3 விரல்களால் கண்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். கட்டைவிரலால் காதுகளை மூடிக்கொண்டு 'ஓம்' என்ற ஒலியை எழுப்ப வேண்டும். இந்த பிராணாயாமத்தை 5 முதல் 7 முறை செய்ய வேண்டும்.
கபாலபாடி பிராணயாமம்: இந்த பிராணயாமம் செய்வதன் மூலம், கணையத்தின் பீட்டா செல்கள் மீண்டும் செயல்படும். இதன் காரணமாக இன்சுலின் உற்பத்தி அதிகரித்து, சுகர் லெவல் கட்டுக்குள் இருக்கும். இது தவிர, இதைச் செய்வதன் மூலம், இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இந்த பிராணாயாம பயிற்சி வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பை எரிக்கிறது.
சூரிய நமஸ்காரம்: சூரிய நமஸ்காரம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் சிறந்த பயிற்சி. தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் கிடைக்கும் எண்ணற்ற பலன்களை ஒரு பட்டியலே போடலாம். இதற்கு தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம், உங்கள் எடையைக் குறைப்பதோடு, நீரிழிவு, பிபி, கொலஸ்ட்ரால் ஆகியவற்றை கட்டுப்படுத்துவது உட்பட பல நோய்களிலிருந்தும் தப்பிக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | அடாவடி கொழுப்பை அட்டகாசமாய் குறைக்கும் உணவுகள்: கண்டிப்பா தினமும் சாப்பிடுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ