Kidney Diseases: நமது உடலில் உள்ள பல உறுப்புகள் பல வித பணிகளை செய்கின்றன. உடலின் சீரான இயக்கத்திற்கு இவை அனைத்தும் மிக அவசியம். அதுவும் சில உறுப்புகள் உடல் இயக்கத்துக்கு மிக இன்றியமையாதவையாக உள்ளன. அவற்றில் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிக அவசியமாகும். ஏனெனில், இது பழுதடைந்தால், நாம் பல வித இன்னல்களை எதிர்கொள்ள நேரிடலாம்.
சிறுநீரகம் நம் உடலில் மிகவும் முக்கியமானது. இது ஒரு வடிகட்டி போல் செயல்படுகிறது. இது இல்லாமல், கழிவுப்பொருட்களை வெளியே எடுக்க முடியாது. உடலில் நச்சுகள் தங்கினால், பல வகையான நோய்கள் வர ஆரம்பிக்கும். இதனால்தான் மருத்துவர்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்துகிறார்கள். சிறுநீரகங்கள் எந்த வகையிலும் சேதமடையாமல் பாதுகாக்க வேண்டும். இதற்கு தினசரி வழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று டாக்டர் இம்ரான் அகமது கூறுகிறார்.
சிறுநீரகப் பிரச்சனைகளை எப்படி கண்டுபிடிப்பது?
சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலோ, சிறுநீரக செயல்பாட்டில் ஏதாவது பிரச்சனை இருந்தாலோ உடலில் பல வித அறிகுறிகள் தோன்றத் துவங்கும். இந்த அறிகுறிகள் குறித்த முழுமையான புரிதல் அனைவருக்கும் இருக்க வேண்டும். இதன் மூலம் சிறுநீரகம் மேலும் பாதிக்கப்படாமல் தவிர்க்கலாம். சிறுநீரக பாதிப்பிற்கான சில முக்கிய அறிகுறிகள் பற்றி இங்கே காணலாம்.
- சரும நிறத்தில் ஏற்படும் மாற்றம்.
- சருமம் உலர்ந்து போவது.
-.நகங்களில் வெள்ளை நிறம்.
-.நகங்கள் பலவீனமாவது.
- தோலில் காரணம் இல்லாமல் அரிப்பு ஏற்படுவது.
சிறுநீரகம் பாதிக்கப்படுவதை தவிர்ப்பது எப்படி?
எடை பராமரிப்பு
உடல் பருமன் அதிகமாவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் இது நீரிழிவு நோய், இதய கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றிற்கு காரணமாகின்றது. இவற்றின் காரணமாக அதிக பாதிப்பு ஏற்படுகின்றது. ஆகையால் சிறுநீரக பாதிப்பு ஏற்படாமல் இருக்க உடல் எடையை குறைக்க வேண்டியது மிக அவசியம் ஆகும்.
உறக்கம்
இரவு தூங்கும் நேரத்தையும் காலையில் விழிக்கும் நேரத்தையும் ஒரே மாதிரியாக நிர்ணயித்துக் கொள்வது சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தினமும் சுமார் 7-8 மணி நேரமாவது உறங்க வேண்டியது மிக அவசியமாகும். இதன் மூலம் சிறுநீரகம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
உடல் செயல்பாடுகள்
உடல் செயல்பாடுகள் சிறுநீரக பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமாகும். உடலை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, யோகாசனம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும்.
ஆரோக்கியமான உணவுகள்
சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த சில பிரத்யேக உணவுகள் உள்ளன. இந்த ஆரோக்கியமான உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் சிறுநீரகத்தை ஆரோக்கியமாகவும் பலமாகவும் வைத்திருக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. )
மேலும் படிக்க | Lungs Healthy Food: நுரையீரல் நலமாக வைத்திருக்க உதவும் சிறந்த உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ