Home Remdies For Acidity: இன்றைய அவசர உலகில், தவறான வாழ்க்கை முறை, தவறான உணவு முறை ஆகியவை நமது செரிமான சக்தியை கெடுத்து விடுகின்றன. ஆரோகியமற்ற உணவை உட்கொள்வதால், செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் அதிகமாகின்றன. ஆரோக்கியமற்ற உணவுமுறையால் வாயுத்தொல்லை, அஜீரணம் போன்றவை ஏற்படுகின்றன. அவசர அவசரமாக உணவு உட்கொள்ளும்போது சரியாக உணவை கடிக்காமல் விழுங்குகிறோம். இதனால், காற்றும் உள்ளே செல்கிறது. சில சமயம் நீண்ட நேரத்திற்கு சாப்பிடாமல் இருக்கிறோம். இவை அனைத்தும் வாயுத்தொல்லைக்கு வழிவகுக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆரோக்கியமற்ற உணவு, அதிக எண்ணெய் கொண்ட உணவுகள், அதிக காரம், மசாலா உள்ள உணவுகள், அதிக மருந்துகள் ஆகியவற்றின் காரணத்தால், வயிறு தொடர்பான பிரச்சனைகள் தொடங்குகின்றன. ஒரு வாரத்தில் 2-3 முறைகளுக்கு மேல் வழக்கமான முறையில் மலம் கழிக்காமல் இருந்தால், மலச்சிக்கல் உள்ளது என புரிந்துகொள்ள வேண்டும். மலச்சிக்கல் ஏற்பட்டால், உடலில் கழிவுகள் சேரத் தொடங்குகின்றன.


இரைப்பைக் குழாயில் வாயு குவிவதால் வயிற்றில் உப்புசம் ஏற்படுகிறது. இருப்பினும், வயிற்று உப்பசத்திற்கு மலச்சிக்கலும் காரணமாக இருக்கலாம். அனைவரது உடலிலும் வாயு உற்பத்தியாகி வெளியிடப்படுகிறது. உடலில் இருந்து வாயு வெளியேறவில்லை என்றால், அது பல வித பிரச்சனைகளை உருவாக்குகின்றது. சமையலறையில் இருக்கும் சில மசாலாப் பொருட்கள் வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என ஆயுர்வேதம் கூறுகின்றது. 


சமையலறையில் இருக்கும் மூன்று மசாலாப் பொருட்களின் சாறு, வாயுத்தொல்லை, மலச்சிக்கல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளை எளிதில் குணப்படுத்தும். அந்த மசாலாக்களை பற்றி இங்கே காணலாம். 


மேலும் படிக்க | யூரிக் அமிலத்தால் மூட்டுகள் மட்டுமல்ல... இதயம், சிறுநீரகமும் பாதிக்கும்... எச்சரிக்கையா இருங்க


சீரகம்


நமது தினசரி சமையலில் சுவையை கூட்ட சீரகம் பயன்படுத்தப்படுகின்றது. சீரகம் செரிமான அமைப்பை மேம்படுத்தும் ஒரு சிறந்த மசாலாவாக கருதப்படுகின்றது. இது வாயுத்தொல்லை, அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் வழங்கும் தன்மை கொண்டது. சீரக நீரை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், உங்கள் செரிமானம் நாள் முழுவதும் நன்றாக இருக்கும். இதற்கு ஒரு ஸ்பூன் சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு அது பாதியாக குறையும் வரை கொதிக்க வைத்து குடிக்கவும்.


சோம்பு


சோம்பு செரிமானத்தில் நல்ல விளைவுகளைக் கொண்டுள்ளது. இதனை உட்கொள்வதால் வாயுத்தொல்லை, அமிலத்தன்மை, வாந்தி மற்றும் குமட்டல் ஆகியவை குணமாகும். வயிற்றில் சேர்ந்தூள்ள வாயு மற்றும் அஜீரணத்தை கட்டுப்படுத்த சோம்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை உட்கொள்வதால் இரைப்பை குடல் பிடிப்புகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். சோம்பு குடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதோடு வாயுவை உண்டாக்கும் பாக்டீரியாவையும் குறைக்கிறது. சோம்பு நீர் செய்ய, ஒரு ஸ்பூன் சோம்பை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை பாதியாகக் குறைக்கும் வரை கொதிக்க வைத்து குடிக்கவும்.


ஓமம்


மருத்துவ குணங்கள் நிறைந்த ஓமத்தை உட்கொள்வதால் வயிற்றில் உள்ள வாயு, அஜீரணம் மற்றும் செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் குணமாகும். ஓம நீர் மலத்தை மென்மையாக்கி மலச்சிக்கலை சரிசெய்கிறது. ஓமம் உட்கொள்வதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஓம நீர் தயார் செய்ய, ஒரு ஸ்பூன் ஓமத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து பாதியாக குறையும் வரை கொதிக்க விடவும். தண்ணீரை சிறிது நேரம் ஆறவைத்து, காலை மற்றும் மாலையில் சாப்பிட்டால், செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும்.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | வெயிட் லாஸ் முதல் சுகர் லெவல் வரை... முளை கட்டிய வெந்தயம் கட்டாயம் டயட்டில் இருக்கட்டும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ