Weight Loss Tips: மாறிவரும் வாழ்க்கை சூழலில் உடல் பருமன் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. பெரும்பாலான மக்கள் அதன் பிடியில் சிக்கியுள்ளார்கள். மக்களின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், உணவுமுறையும், குறைவான உடல் உழைப்பு மற்றும் உடல் செயல்பாடுகளும், ஒரே இடத்தில் மணிக்கணக்கில் அமர்ந்து அதிக வேலை செய்ய வேண்டிய நிலையும் அதிகரிக்கும் உடல் பருமனுக்கு முக்கிய சில காரணங்களாக பார்க்கப்படுகின்றன. இப்படிப்பட்ட வாழ்க்கை முறை தொப்பை கொழுப்பை (Belly Fat) அதிகரித்து மிக வேகமாக உடல் எடையையும் அதிகரிக்கின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் பருமன் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் தாக்குகிறது. உடலின் பல்வேறு இடங்களில் கொழுப்பு அதிகரிக்கிறது. உதாரணமாக, சிலருக்கு தொப்பையில், சிலருக்கு கைகளில், சிலருக்கு கால்களில், சிலருக்கு மேல் உடலில், சிலருக்கு கீழ் உடலில் கொழுப்பு அதிகரிக்கிறது. இப்படி உடலில் சேரும் கொழுப்பை அகற்ற, குறிப்பாக தொப்பையை குறைக்க மக்கள் கடினமாக உழைக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடினமான உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்கள். எனினும், இவற்றாலும் முழுமையான பலன்களை அடைய முடிவதில்லை. சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். உடல் பருமனை குறைக்க, எந்த வித பக்க விளைவுகளும் இல்லாத சில எளிய வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.


அனைவராலும் ஜிம் சென்று உடற்பயிற்சிகளை செய்ய முடிவதில்லை, சிலரால் உணவிலும் அதிக அளவு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க முடிவதில்லை. ஆனால், ஜிம், டயட் இல்லாமலும் உடல் எடையை எளிதாக குறைக்கலாம் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இதை எப்படி செய்வது? இங்கே தெரிந்துகொள்ளலாம். 


முட்டை


முட்டை புரதம் மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாக கருதப்படுகின்றது. அதிக புரதம் மற்றும் குறைந்த கொழுப்புள்ள முட்டையை எடை இழப்பு உணவில் சேர்க்கலாம். இது காலை உணவுக்கு மிக ஏற்றதாக கருதப்படுகின்றது. 


கொழுப்பு அமிலங்கள்


நம் உடலில் உள்ள நியூரான்கள் மற்றும் நரம்புகள் கொழுப்பு அமிலங்களால் ஆனவை. இவற்றில் நல்ல கொழுப்புகள் உள்ளன. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. நாம் 3 கிராம் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை உட்கொண்டால், அது கொழுப்பை எரிக்கிறது. ஆகையால் இந்த கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவுகளை நாம் கண்டிப்பாக நம் தினசரி டயட்டில் சேர்க்க வேண்டும். டயட்டில் அக்ரூட் பருப்புகள், சால்மன் மீன் மற்றும் சியா விதைகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை உணவில் சேர்க்கலாம்.


ஆரோக்கியமான பாக்டீரியா


உடலில் நல்ல பாக்டீரியாக்கள் இருப்பது மிக அவசியம் ஆகும். அதன் அளவை அதிகரிக்க, நமது தினசரி உணவில் 2 கிளாஸ் மோர் சேர்த்துக்கொள்ளலாம். அதில் சீரகப் பொடி, இஞ்சி, புதினா போன்றவற்றைச் சேர்த்து உட்கொள்வது கூடுதல் நன்மையை அளிக்கும். 


மேலும் படிக்க | தினமும் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகள்


செலினியம்


செலினியம் நம் உடலில் தைராய்டு அளவை பராமரிக்க உதவுகிறது. தினமும் 55 மைக்ரோகிராம் செலினியம்  உட்கொள்ளலாம். செலினியத்தை சேர்க்க, உங்கள் உணவில் பிரேஸ் செய்யப்பட்ட பருப்புகள், மீன், காளான்கள், முட்டை மற்றும் பால் ஆகியவற்றை உட்கொள்ளலாம்.


உறக்கம்


உடலில் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கும், உடல் எடையை குறைக்கவும் தினமும் 7-8 மணிநேரம் சரியாக தூங்குவது மிக முக்கியமாகும். முழுமையான தூக்கம் இருந்தால், அதன் மூலம் தேவையற்ற பசியும் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை நாம் உட்கொள்வதையும் நாம் தவிர்க்கலாம். 


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | மளமளவென உடல் எடை குறைய இந்த வீட்டு வைத்தியங்களை ஃபாலோ செய்யுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ