Belly Fat Reduction Tips: வயிற்றில் அதிகமாக சேரும் கொழுப்பை தொப்பை கொழுப்பு என்கிறோம். இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். தொப்பை கொழுப்பு என்பது நீரிழிவு மற்றும் இதய நோய்களின் அறிகுறி என்றும் சில ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது. அதிக செயல்பாடு இல்லாத வாழ்க்கை முறையால் தொப்பை கொழுப்பு பிரச்சனை மக்களிடையே வேகமாக அதிகரித்து வருகிறது. பலர் இதற்கு ஜிம் சென்று பல வித உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். ஆனால் சில எளிய இயற்கையான வழிகளிலும் தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொப்பையை குறைக்கும் காய்கறிகள் (Vegetables to Reduce Belly Fat): 


தொப்பையை குறைக்க உதவும் பல காய்கறிகள் உள்ளன. காய்கறிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இவற்றில் கலோரிகள் குறைவாக உள்ளன. நார்ச்சத்து நிறைந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகும், எனவே அவற்றை உணவில் சேர்ப்பது எளிது. பருவகால காய்கறிகளில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. தொப்பையை குறைக்க உதவும் 5 காய்கறிகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். 


1. முட்டைக்கோஸ் (Cabbage)


முட்டைக்கோஸ் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காயாகும். இதில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளது. நறுக்கப்பட்ட  முட்டைக்கோஸில் 22 கலோரிகள் மட்டுமே இருக்கின்றன. தொப்பையை குறைத்து உடல் எடையை குறைக்க (Weight Loss) விரும்பும் நபர்கள் அதை உட்கொள்வது ஒரு நல்ல வழியாக இருக்கும். முட்டைக்கோஸ் உட்கொள்வது ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. இது நமது வயிற்றுக்கு முழுமையான உணர்வை அளிக்கின்றது. முட்டைக்கோஸ் கொண்டு கறி, கூட்டு, சாலட், சூப் என பல உணவு வகைகளை செய்யலாம். 


2. ப்ரோக்கோலி (Broccoli)


ப்ரோக்கோலி சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. வைட்டமின் சி, கால்சியம் மற்றும் குரோமியம் போன்ற சத்துக்கள் ப்ரோக்கோலியில் உள்ளன. வைட்டமின் சி, கொழுப்பை ஆற்றலாக மாற்ற உதவுகிறது. எடை இழப்பு தவிர, ப்ரோக்கோலியை உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது உடலுக்கு ஏராளமான ஆற்றலை வழங்குகிறது.


3. பூசணி (Pumpkin)


பூசணிக்காயில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. உங்கள் எடையைக் குறைக்கும் உணவில் பூசணிக்காயை சேர்த்துக்கொள்ள வேண்டும். பூசணிக்காயை கறி, கூட்டு, சாம்பார், துவையல் என பல வடிவங்களில் உட்கொள்ளலாம். 


மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகளே உஷார்!! இந்த பழங்கள் பக்கமே போகாதீங்க..சுகர் லெவெல் எகிறிடும்!!


4. கேரட் (Carrot)


தொப்பை கொழுப்பை குறைக்க உதவும் காய்களில் கேரட்டிற்கும் முக்கிய பங்கு உள்ளது. கேரட் ஜூஸ் குடிப்பதும் தொப்பையை குறைக்க உதவுகிறது.


5. வெள்ளரி (Cucumber)


வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும். வெள்ளரியில் தண்ணீர் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. வெள்ளரிக்காய் சாப்பிட்டால் வயிறு விரைவில் நிரம்புகிறது. வெள்ளரிக்காய் சாறு குடிப்பது தொப்பையை குறைக்க உதவுகிறது. ஏனெனில் வெள்ளரிக்காயில் கலோரி அளவு குறைவாக உள்ளது. இதை ஆரோக்கியமான மத்தியான சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம்.


6. பீன்ஸ் (Beans)


பீன்ஸ் உட்கொள்வது உடல் பருமன் அபாயத்தைக் குறைக்கும். கரையக்கூடிய நார்ச்சத்தை உட்கொள்வது தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. பீன்சை கறி, கூட்டு, உசுலி என பல வகைகளில் தயார் செய்து சாப்பிடலாம். அல்லது பீன்ஸை சாலட் வடிவிலும் சாப்பிடலாம். தொப்பையை குறைக்க (Belly Fat) கீரை, காளான், போன்ற காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.


மேலும் படிக்க | உடல் பருமன் முதல் ரத்த கொதிப்பு வரை.... நோய்களை நிர்மூலமாக்கும் பீட்ரூட் ஜூஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ