தொப்பை கொழுப்பால் அவதியா? நோ டென்ஷன்.. கறிவேப்பிலையை இப்படி சாப்பிட்டா சூப்பரா குறைக்கலாம்

Belly Fat Reduction: சமையலறையில் நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் சில இலைகளை சரியாகப் பயன்படுத்தினால் தொப்பையை எளிதில் குறைக்கலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 15, 2023, 08:54 AM IST
  • கறிவேப்பிலை கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
  • உடல் பருமன் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கறிவேப்பிலையில் உள்ளன.
  • சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் கறிவேப்பிலை பயனுள்ளதாக இருக்கும்.
தொப்பை கொழுப்பால் அவதியா? நோ டென்ஷன்.. கறிவேப்பிலையை இப்படி சாப்பிட்டா சூப்பரா குறைக்கலாம் title=

Belly Fat Reduction: தொப்பை கொழுப்பு உடலின் மிகவும் பிடிவாதமான கொழுப்பாக கருதப்படுகிறது. அதை குறைப்பது மிகவும் கடினம். பெரும்பாலும் அதிக எடை உள்ள மக்கள் எடையை இழக்கிறார்கள், ஆனால் பிடிவாதமான தொப்பை கொழுப்பு குறைவதில்லை. தொப்பை கொழுப்பைக் குறைக்க பல பல வித நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். சிலர் ஜிம் சென்று இதற்கான பலபிரத்யேக உடற்பயிற்சிகளையும் செய்கிறார்கள். சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். இவை தேவை என்றாலும், சில இயற்கையான எளிய வழிகளிலும் தொப்பை கொழுப்பையும் எடையையும் குறைக்கலாம் (Weight Loss). அப்படி ஒரு நல்ல வீட்டு வைத்தியம் பற்றி இந்த பதிவில் காணலாம். 

உடல் எடையை குறைப்பதில் பல வீட்டு பானங்கள், மசாலாக்கள் மற்றும் மூலிகைகள் பயனுள்ளதாக கருதப்படுகின்றன. சமையலறையில் நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் சில இலைகளை சரியாகப் பயன்படுத்தினால் தொப்பையை எளிதில் குறைக்கலாம்.

தொப்பையை குறைக்க கறிவேப்பிலை (Curry Keaves To Reduce Belly Fat)

ரசம், சாம்பார், துவையல், தாளிக்க என பயன்படுத்தப்படும் கறிவேப்பிலை உணவின் சுவை மற்றும் நறுமணத்தை அதிகரிக்க பயன்படுகிறது. ஆனால் இதில் பல மருத்துவ குணங்களும் உள்ளன என்பது பலருக்கு தெரிவதில்லை. இது பிடிவாதமான தொப்பையைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தொப்பை கொழுப்பை குறைக்க கறிவேப்பிலை எவ்வாறு பயன்படுகிறது என இந்த பதிவில் காணலாம். 

கறிவேப்பிலையின் ஆரோக்கிய நன்மைகள் (Health Benefits of Curry Laves) 
 
- கறிவேப்பிலை உடல் எடையை குறைக்க உதவும். கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் ஈ ஆகியவற்றுடன் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. மேலும் இதில் அதிக அளவு தாமிரம், இரும்பு மற்றும் நார்ச்சத்து உள்ளது.

- கறிவேப்பிலை செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும் உதவுகிறது.

- கறிவேப்பிலை வயிற்றுக்கு குளிர்ச்சி தருகிறது. மேலும் இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, தொப்பையில் சேர்ந்துள்ள கொழுப்பை எரிக்கிறது.

- கறிவேப்பிலை (Curry Leaves) கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது.

- உடல் பருமன் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கறிவேப்பிலையில் உள்ளன.

- சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் கறிவேப்பிலை பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க | அய்யா...கொய்யா!!! சுகர் லெவலை கட்டுப்படுத்த இந்த இலையை தினமும் சாப்பிட்டால் போதும்!!

உடல் எடையை குறைக்க கறிவேப்பிலையை எப்படி உட்கொள்ள வேண்டும்? 

- வெறும் வயிற்றில் 3-4 கறிவேப்பிலையை மென்று சாப்பிடவும்.

- தொப்பை கொழுப்பை குறைக்க இதன் சாற்றையும் அருந்தலாம்.

- இதற்கு, தண்ணீரில் 10-15 கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க வைக்கவும். பின் வடிகட்டி, அதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும்.

- கறிவேப்பிலை டீயும் செய்யலாம். இதற்கு 10-15 கறிவேப்பிலை மற்றும் ஒரு சிறிய துண்டு இஞ்சியை தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். பின் வடிகட்டி அதனுடன் எலுமிச்சை சேர்த்து குடிக்கவும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஜுஜூபி பழத்தை தமிழ்ல என்ன சொல்வாங்க தெரியுமா? ஊட்டச்சத்துக்களின் சுரங்கம் இலந்தை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News