Yoga For Diabetes: இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் சூப்பர் யோகாசனங்கள்!
Yogasanas For Diabetes: உயர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றாலும், உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி யோகா போன்றவற்றல் கட்டுப்படுத்த முயற்சிப்பது சிறந்தது.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சிறந்த யோகாசனங்கள்: நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிக முக்கியம். உயர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றாலும், உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி யோகா போன்றவற்றல் கட்டுப்படுத்த முயற்சிப்பது சிறந்தது. இதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக மாத்திரையின் அளவை மருத்துவர்கள் குறைக்கும் வாய்ப்பும் உள்ளது. குறிப்பிட்ட யோகாசனங்களை செய்வதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்தலாம். உயர் இரத்த சர்க்கரைக்கான சிறந்த யோகாபயிற்சிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் யோகாசனங்கள்
அர்த்த மத்ஸ்யேந்திராசனம்
அர்த்த மத்ஸ்யேந்திராசனம் உயர் இரத்த சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள யோகாவாக கருதப்படுகிறது. இது செரிமான அமைப்பையும் வலுப்படுத்துகிறது. அர்த்த மத்ஸ்யேந்திராசனம் செய்வதன் மூலம் கணையம் மசாஜ் செய்யப்படுகிறது. இந்த யோகா செய்வதன் மூலம் இன்சுலின் உணர்திறன் அதிகரித்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
பக்ஷிமோத்தனாசனம்
பக்ஷிமோத்தனாசனம் செய்வதன் மூலம், உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை சிறப்பாக கட்டுப்படுத்தலாம். இன்சுலின் உற்பத்தியை தூண்டுவதால், இந்த ஆசனம் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கிறது. இந்த யோகா செரிமானத்திற்கும் மிகவும் நல்லது. ஆசிட்டி, வாயு தொல்லை போன்றவற்றையும் போக்கும் திறன் கொண்டது.
தனுராசனம்
தனுராசனம் மூலம் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை பாதிக்கிறது. இது இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவது நல்லது. இதனால் இரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது. தனுராசனம் செய்வது உடல் நலத்திற்கு நல்லது.
சூரிய நமஸ்காரம்
சூரிய நமஸ்காரம் எல்லா வகையிலும் நன்மை தரக்க் கூடியாது. இது இரத்த சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். சூரிய நமஸ்காரத்தில் பல வித நிலைகள் உள்ளன. இது இன்சுலின் உற்பத்தியை தூண்டுவதன் மூலம், சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. சூரிய நமஸ்காரம் செய்வதால் தசைகளும் வலுவடையும்.
மேலும் படிக்க | Prediabetes இருந்தால் கண்டிப்பாக நீரிழிவு நோய் வருமா? இதன் அறிகுறிகள் என்ன?
பிரமாரி பிராணாயாமம்
மன அழுத்தத்தைக் குறைக்க பிரமாரி யோகா மிகச் சிறந்த வழி. பிரமாரி பிராணாயாமம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் கட்டுப்பாட்டிற்கும் பிரமாரி பிராணாயாமம் செய்வது நல்லது. மேலும் சோர்வு, ரத்த அழுத்தம் ஆகியவற்றையும் போக்கும்
கபால்பாடி யோகா
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ள நோயாளிகள், நிச்சயம் தினமும் கபால்படி யோகா செய்ய வேண்டும். கபால்பதி செய்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இந்த யோகா ஆரோக்கியத்திற்கு நல்லது. இது கணையத்தின் செயல்திறனையும் மேம்படுத்துகிறது.
அனுலோம்-விலோம் பிராணயாமம்
மனதை அமைதிப்படுத்த, அனுலோம்-விலோம் பயிற்சி செய்வது நன்மை பயக்கும். அனுலோம் விலோம் என்பது யோகாவில் ஒரு குறிப்பிட்ட வகை பிராணயாமம். இதில் கட்டுப்படுத்தப்பட்ட வகையில் சுவாச பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. மூச்சை உள்ளிழுக்கும்போது ஒரு நாசியை மூடுவதும், மூச்சை வெளியேற்றும்போது மற்ற நாசியை மூடி வைத்திருப்பதும் இதில் அடங்கும் இவ்வாறு செய்வதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். ஒரு நபரின் மன அழுத்தம் நீரிழிவு நோயில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அத்தகைய சூழ்நிலையில், அனுலோம்-விலோம் பயிற்சி செய்வதன் மூலம் அதைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
(பொறுப்புத் துறப்பு: இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ZEE MEDIA இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தைராய்டு பிரச்சனையா? இந்த உணவுகள் உங்கள் உணவில் அவசியம் இடம்பெற வேண்டும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ