High Risk Foods: குழந்தைகளுக்கு அதிக ஆபத்தான உணவுகள்! கண்டிப்பாக தவிர்க்கவும்...
பெரும்பாலான உணவுகள், பொதுவான உணவு பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்தால் மட்டுமே, உண்பதற்கு உகந்தவை.
உயிர் வாழ உணவே அடிப்படை என்பது அனைவருக்கும் தெரியும். உயிர் வாழ ஆதாரமான உணவு, உயிரையும் எடுக்கும் என்பதும் நிதர்சனமான உண்மை. பொதுவாக, உணவுகள் பழையதானால் நஞ்சாக மாறிவிடும். பெரும்பாலான உணவுகள், பொதுவான உணவு பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்கும் வரை மட்டுமே, உண்பதற்கு உகந்தவை.
பொதுவாக யாரும் சாப்பிடக் கூடாத சில அதிக ஆபத்துள்ள உணவுகள் என்ன தெரியுமா? பச்சை பால், சமைக்காத முட்டைகள், பதப்படுத்தப்படாத பழச்சாறு, சமைக்கப்படாத மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி என இந்த பட்டியல் நீளும்.
பதப்படுத்தப்பட்ட மாட்டிறைச்சியில் ஈ.கோலியும், கோழி இறைச்சியில் சால்மோனெல்லாவும் இருக்கலாம் என்பது அனைவரும் அறிந்ததே, எனவே இந்த உணவுகளை நன்கு சமைக்காமல் சாப்பிடுவது ஆபத்தானது. இந்த விஷயத்தை யாரும் சோதனை செய்து பார்த்து ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.
குழந்தைகளுக்கு அதிக ஆபத்துள்ள உணவுகள்
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும், 12 மாதங்களுக்கு குறைவான குழந்தைகளுக்கும் தேன் கொடுப்பது தொடர்பாகவும் எச்சரிக்கை செய்யப்படுகிறது. பொட்டுலிசம் என்ற உயர் ஆபத்து காரணமாக, குழந்தைகளுக்கு அதிக ஆபத்துள்ள உணவுகளின் பட்டியலில் தேன் இடம் பெறுகிறது. இந்தியாவில் குழந்தை பிறந்ததுமே நாக்கில் தேன் தடவும் பழக்கம் இருப்பதால் இந்த விஷயத்தை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது.
அனைவருக்கும் ஆபத்தான உணவுகள் ஒருபுறம் என்றால், கர்ப்பிணிப் பெண்கள், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள், முதியவர்கள், சிறார்கள், குழந்தைகள் உட்பட சில உயர்-ஆபத்து குழுவை சேர்ந்தவர்களுக்கு, சில உணவுகள் பிரச்சனையாக மாறலாம்.
சமைக்கப்படாத கீரைகள் காளான் போன்றவை, முளைக்கட்டிய பயிர் வகைகள்,வேகவைக்கப்படாத முட்டைகள், பாலாடைக்கட்டிகள், குளிரூட்டப்பட்ட கடல் உணவுகளை இந்தப் பிரிவினர் சாப்பிடக்கூடாது (Foods to Avoid). இந்த உணவுகளில் லிஸ்டீரியா, சால்மோனெல்லா மற்றும் பிற பாக்டீரியாக்கள் இருக்கலாம்.
குழந்தைக்கு உணவோ அல்லது பால் உட்பட திரவ உணவுகள் எதை கொடுத்தாலும், இரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக எஞ்சியிருக்கும் உணவுப்பொருட்களை கொடுக்க வேண்டாம். பொதுவாக குழந்தைகளுக்கு பாட்டிலில் பால் கொடுப்பதைவிட டம்ளர் மூலம் கொடுப்பது சிறந்தது.
READ ALSO | ‘இந்த’ பிரச்சனை இருந்தால் பேரீச்சபழத்திற்கு ‘NO' சொல்லுங்க
அதேபோல, தாய்ப்பாலை எடுத்து சேமித்து பிறகு குழந்தைக்கு கொடுக்கும் போது, பம்ப் செய்யப்பட்ட தாய்ப்பாலை (Breast Milk) எவ்வளவு காலம் பாதுகாப்பாக சேமிக்கலாம் என்பதற்கான வழிகாட்டுதல்களும் உள்ளன. அவற்றை கண்டிப்பாக கடைபிடிக்கவும். பச்சிளம் குழந்தைகள் மிகவும் மென்மையானவை, அவற்றின் ஆரோக்கியத்தில் எந்தவித சமரசமும் வேண்டாம்.
குழந்தைகளுக்கு சில உணவுகள் மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தலாம். கடினமான மிட்டாய், வேர்க்கடலை/கொட்டைகள், விதைகள், முழு திராட்சை, சமைக்காத கேரட், ஆப்பிள்கள், மீன் போன்றவை குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் உட்பட குறிப்பிட்ட நபர்கள் மீன்கள் சாப்பிடுவதற்குக்ம் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும். இவர்கள், சுறா, வாள்மீன், கானாங்கெளுத்தி, டைல்ஃபிஷ் போன்ற அதிக அளவு பாதரசம் கொண்ட மீன்களை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
புரதம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் மூலமான மீன் சாப்பிடுவதால் பல நன்மைகளும் உள்ளதால், மீன் உண்பதை தவிர்க்காமல், கவனமாக சாப்பிட்டால் போதும்.
ALSO READ | குளிர்கால நோய்களை விரட்டும் வெல்லம் கலந்த டீ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR