Jaggery tea benefits: குளிர்கால நோய்களை விரட்டும் வெல்ல கலந்த டீ..!!

குளிர்காலத்தில்  ஏற்படும் பொதுவான உடல நல பிரச்சனைகளையும், நோய்களையும் விரட்ட வெல்லம்  போட்ட தேநீர் குடிக்கலாம்.  

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 25, 2021, 03:27 PM IST
Jaggery tea benefits: குளிர்கால நோய்களை விரட்டும் வெல்ல கலந்த டீ..!!

Jaggery tea benefits: குளிர்காலத்தில் பல சளி, காய்ச்சல் போன்ற பல வகை நோய்களிலிருந்து  நம்மை பாதுகாத்துக் கொள்ள வெல்ல கலந்த தேநீர் மிகவும் நல்லது. அதை செய்யும் முறை மற்றும் அதன் அளப்பரிய பலன்களை தெரிந்து கொள்ளலாம்.

குளிர்காலத்தில், பெரும்பாலானோர் டீயுடன் தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள். பொதுவாக மக்கள் சர்க்கரை கலந்து தேநீரை அதிகம் குடிக்க விரும்புகிறார்கள், ஆனால் சர்க்கரையை விட வெல்லம் டீ உங்களுக்கு அதிக நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? வெல்லம் கலந்த டீயின் நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஒற்றைத் தலைவலி அல்லது தலைவலி இருந்தால், பசும்பாலில் வெல்லம் கலந்து தயாரித்த டீயைக் குடித்தால் நிவாரணம் கிடைக்கிறது.

ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுவது என்ன!

வெல்லத்தில் சூடு அதிகம் என்கிறார்  பிரபல ஆயுர்வேத மருத்துவர் அப்ரார் முல்தானி. இது உடலை சூடாக வைத்துக் கொள்வதிலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் ஒரு வழிமுறையாக கருதப்படுகிறது. சூடான உணவு என்பதால், உடல் எடையும் குறையும். குளிர்காலத்தில் வெல்லம் தேநீர் குடிப்பதால் சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இதற்கு இஞ்சி, கருப்பு மிளகு மற்றும் துளசி இலைகளை சேர்த்து வெல்லம் தேநீர் அருந்தலாம். இதனை உட்கொள்வதன் மூலம் இருமல் மற்றும் சளி பிரச்சனையை நீக்கலாம்.

ALSO READ | பிசைந்து வைத்த ரொட்டி மாவை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாமா..!!!

வெல்லத்தில் காணப்படும் சத்துக்கள்

வெல்லத்தில் உள்ள சத்துக்களைப் பற்றி கூறினால், அதில் ஏராளமான வைட்டமின்கள்-ஏ மற்றும் பி, பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், சுக்ரோஸ், குளுக்கோஸ், இரும்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் தாதுக்கள், வைட்டமின்கள் உள்ளன.

வெல்லம் தேநீர் செய்வது எப்படி

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், சுவைக்கு ஏற்ப சிறிது வெல்லம் சேர்க்கவும். இப்போது அதில் கருப்பு மிளகு, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி மற்றும் துளசி இலைகளை சேர்க்கலாம். தேநீரைக் கொதிக்கும் அளவுக்கு இந்தக் கலவையை கொதிக்க வைக்கவும்.
அதிலிருந்து நறுமணம் வர ஆரம்பித்ததும் அதில் சிறிது டீத்தூள் சேர்த்து வடிகட்டவும்.
பால் இல்லாமல் குடிக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் பால் சேர்க்க விரும்பினால். பாலை தனியாக சூடாக்கி கலக்கவும்.

ALSO READ | இஞ்சியின் தோலை நீக்கி விட்டு பயன்படுத்துகிறீர்களா; இந்த செய்தி உங்களுக்கு தான்..!!!

வெல்லம் டீ குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்

1. வெல்லம் தேநீர் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. 

2. இதனை தொடர்ந்து குடிப்பதும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

3. வெல்லத்தில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை பெறலாம்.

4. உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை வழங்க உதவுகிறது என்பதால், புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.

5. வெல்லம் கலந்த டீயை உட்கொள்வதன் மூலம் சளி மற்றும் இருமல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம்.

6. வெல்லம் கலந்த டீ குடிப்பதால் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும்.

7. வெல்லம் கலந்த டீ குடிப்பதன் மூலம் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி குறையும்.

8. வெல்லம் கந்த தேநீர் வயிற்றை சுத்தமாக வைத்திருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

9. வெல்லத்தில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால், வெல்லம் டீ எலும்புகளை வலுப்படுத்தும்.

இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. பொதுவான விழிப்புணர்வு நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது.

ALSO READ | உயரத்தை அதிகரிக்க வேண்டுமா; இதோ நான்கு எளிய வழிகள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

More Stories

Trending News