கோவிட் -19 தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசியின்  55 லட்சம் டோஸ்களை அரசு வாங்க   உள்ள நிலையில்,  இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட நபருக்கு ஏதேனும் மோசமான பக்க விளைவுகள் ஏற்பட்டால், இழப்பீடு வழங்குவதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தடுப்பூசி பெறுபவர்கள் கையெழுத்திடப்பட வேண்டிய ஒப்புதல் படிவத்தில், "ஏதேனும் பாதகமான நிகழ்வுகள் அல்லது கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்டால், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் / மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை  வழங்கப்படும்" என்று பாரத் பயோடெக் கூறியுள்ளது.


தடுப்பூசி காரணமாக பக்க விளைவு ஏற்பட்டது என நிரூபிக்கப்பட்டால், அதற்கான இழப்பீட்டை பாரத் பயோடெக் (Bharat BioTech) நிறுவனம் செலுத்தும் ”என்று ஒப்புதல் படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளில், கோவாக்சின் COVID- 19 க்கு எதிரான எதிர்ப்பு திறனை உருவாக்கும் என நிரூபித்துள்ளது.


இருப்பினும், தடுப்பூசியின் 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதால் மருத்துவ செயல்திறன் எந்த அளவிற்கு உள்ளத்து என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை என அந்நிறுவனம் மேலும் கூறியுள்ளது. 


ஒரு மருந்து மருத்துவ பரிசோதனை கட்டத்தில் இருக்கும்போது தடுப்பூசி போடப்படுவத்தால் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டால் மக்களுக்கு இழப்பீடு வழங்க நிறுவனம் பொறுப்பாகும்.


மருத்துவ பரிசோதனை முறையில், பொது நலனை கருத்தில் கொண்டு அவசரகால பயன்பாட்டிற்காக கோவாக்சின் விற்பனைக்கு அல்லது விநியோகிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.


இதற்கிடையில், பாரத்பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் கூட்டு நிர்வாக இயக்குநர் சுசித்ராஎல்லா (SuchitraElla) தனது ட்விட்டர் கணக்கில், "நாட்டின் பொது நலனுக்காக ச்சுகாதார சேவை அளிப்பத்தில் கோவாக்சின் & பாரத் பயோடெக் உண்மையிலேயே பெருமிதம் கொள்கிறது " என்று கூறினார்.


ALSO READ | Diabetes: நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் வெங்காயம்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR