முடி உதிர்தல் பிரச்சனைக்கு முடிவு கட்டும் ‘சில’ சஞ்சீவினிகள்!
முடி உதிர்தல் மற்றும் முடி பிளவு பிரச்சனையை கட்டுப்படுத்த பலர் சந்தையில் கிடைக்கும் இரசாயனப் பொருட்களையும் பயன்படுத்துகின்றனர். ஆனால், அதனால், பணம் செலவழிகிறதே தவிர தீர்வு எதுவும் கிடைப்பதில்லை.
Hair care Tips: நம்மில் பலர் சந்திக்கும் பொதுவான பிரச்சனை, தலை முடி அதிகமாக உதிர்தல் பிரச்சனை என்றால் மிகை இல்லை. சில வீட்டு வைத்தியங்கள் மூலம் இதற்கான தீர்வை எளிதாக பெறலாம். அதை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் முடி உதிர்தல் பிரச்சனையிலிருந்து நிச்சயம் விடுபடலாம். தவறான வாழ்க்கை முறை காரணமாகவும், முடி உதிர்தல் மற்றும் முடி பிளவு பிரச்சனை காணப்படுகிறது. முடி உதிர்தலைக் கட்டுப்படுத்த பலர் சந்தையில் கிடைக்கும் இரசாயனப் பொருட்களையும் பயன்படுத்துகின்றனர். ஆனால், அதனால், பணம் செலவழிகிறதே தவிர தீர்வு எதுவும் கிடைப்பதில்லை. மிகவும் பிரபலமான ஆயுர்வேத மருத்துவர் அப்ரார் முல்தானி, உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் இருக்க பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன எனக் கூறி அதனை விளக்கியுள்ளார்.
முடி உதிர்தல் பிரச்சனையில் இருந்து விடுபட எளிய சிகிச்சை வழிகள் :
1. கரிசலாங்கண்ணி (Bhringraj)
கரிசலாங்கண்ணிக்கு பிருங்கராஜ், கரிசாலை, தேகராஜம் என சித்த மருத்துவத்திலும் ஆயுர்வேத மருத்துவத்திலும் பல பெயர்கள் உண்டு. அதில் வெள்ளைக் கரிசலாங்கண்ணி தலைமுடிக்கும் மஞ்சள் கரிசலாங்கண்ணி உணவாகவும் பயன்படுத்துகிறோம். பிருங்கராஜ் தலை முடிக்கு ஒரு சஞ்சீவினியாக செயல்படுகிறது. இதனை பயன்படுத்துவதால், முடி உதிர்தல், பொடுகு ஆகிய பிரச்சனைகள் தீருவதோடு, முடி நரைப்பதையும் குறைக்கிறது.
2. நெல்லிகாய் ( Amla)
எண்ணெயைப் போலவே நெல்லிக்காய் சாற்றையும் கூந்தலில் மசாஜ் செய்யலாம். இதற்கு ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் ஜூஸை எடுத்துக் கொள்ளவும். பருத்தியினால் அதனை தொட்டு உச்சந்தலையில் தடவவும். அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு தலையை அலசவும். இதனால் தலை முடி மிகவும் வலுவாகும்.தலை முடிக்கு மருதாணி தடவி வந்தால், அதில் நெல்லிக்காய் சாற்றை கலக்கலாம். மருதாணியில் நெல்லிக்காய் ஜூஸை கலந்து இரவு முழுவதும் அப்படியே விடவும். இது முடியை இயற்கையான கருப்பு நிறத்திற்கு கொண்டு வரவும் இது உதவுகிறது. நெல்லிக்காயில் உள்ள கூறுகள் மற்றும் அதன் தன்மை முடியை மென்மையாக்குவதோடு, பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் ஆக்குகிறது. நெல்லிக்காயை பேஸ்ட் செய்து, கூந்தலில் தடவினால், முடி வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.அழகான அடர்த்தியான கூந்தலை பெறலாம்.
மேலும் படிக்க | நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் நித்ய கல்யாணி..! பலன்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
3. ஆலுவேரா (Aloe Vera)
ஆலுவேராவில், இயற்கையாகவே முடி வளர்ச்சியைத் தூண்டும் புரோட்டியோலிடிக் என்சைம்களைக் கொண்டுள்ளது. இது சக்திவாய்ந்த ப்ரூரிடிக் பண்புகளைக் கொண்டிருப்பதால் உச்சந்தலையில் அரிப்பு மற்றும் எரிச்சலை நீக்குகிறது. கற்றாழை ஜெல்லை உச்சந்தலையில் தடவி சிறிது நேரம் ஊற விடவும். சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு கழுவவும். இது உங்கள் பாதிக்கப்பட்ட முடியை சரிசெய்வது மட்டுமல்லாமல், உலர்ந்த முடியை பட்டு போன்று, மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது.
4. தேங்காய் எண்ணெய் (Coconut Oil)
முடி பராமரிப்பிற்கு தேங்காய் எண்ணெய் மிகச் சிறந்தது. தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் குறைந்த மூலக்கூறு எடையைக் கொண்டுள்ளது எனவே முடிகளின் வேர்களுக்குள் எளிதில் ஊடுருவி முடியை உறுதியாக்குகிறது. நீங்கள் தேங்காய எண்ணெய் தவிர தேங்காய் கொப்பரையை அரைத்தும் தடவலாம். தேங்காய் எண்ணெய் எல்லா வலையிலும், முடியை வலுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)
மேலும் படிக்க | மாம்பழ தோலை தூக்கி எறியவேண்டாம்..! அதில் இருக்கும் மருத்து குணங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ