நீரிழிவு நோயாளிகள் Omicron தாக்கத்திலிருந்து எப்படி தங்களை காத்துக் கொள்ளலாம்
Omicron Variant: நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோயாளிகள் கோவிட்-19 இல் இருந்து தடுக்க சில முக்கியமான விஷயங்களைப் பின்பற்றுவது முக்கியம். அதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.
Omicron Variant: கொரோனா வைரஸின் ஒமிக்ரான் (Omicron) மாறுபாட்டின் தொற்று அதிவேகமாக பரவி வருகின்றன, அத்தகைய சூழ்நிலையில் நீரிழிவு நோயாளிகள் கோவிட் -19 இல் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள சில முக்கிய விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம். நிபுணர்களின் கூற்றுப்படி, நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலமும், Antioxidant நிறைந்த உணவை உட்கொள்வதன் மூலமும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க முடியும். அதன்படி இது உங்களை தொற்று பாதிப்பில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள உதவும்.
இவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்
நிபுணர்களின் கூற்றுப்படி, கோவிட் 19 தடுப்பூசி உங்கள் T-cell நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்கிறது. அதே நேரத்தில், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சரியான நேரத்தில் உட்கொள்வதன் மூலம் இயற்கையான முறையில் நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
ALSO READ | ஒமிக்ரானுக்கு எதிராக மற்றொரு தடுப்பூசி..! ஆய்வில் தகவல்
உடல் பருமன் ஒரு பிரச்சனையாக மாறும்
நீரிழிவு நோய்யால் பாதிக்கப்படுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். எனவே அவர்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்துவது மற்றும் சர்க்கரை அளவை எப்போதும் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம். இதற்கு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இன்சுலின் எடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். நீரிழிவு நோயாளிகள் தங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது முக்கியம்.
உங்களுக்கு உடல் பருமன் பாதிப்பு இருந்தால், கோவிட் தொற்று ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே உடல் பருமனுடன் கூடிய நீரிழிவு பிரச்சனை உங்களுக்கு ஆபத்தானது.
Antioxidant நிறைந்த உணவை உண்ணுங்கள்
சமச்சீர் உணவு எந்த வித தொற்று மற்றும் நோய்களிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கும். Antioxidant நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம், நீங்கள் வைரஸ் ஏற்படாமல் தவிர்க்கலாம். நட்ஸ், பழங்கள் மற்றும் சாலட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். Antioxidant உங்கள் டிஎன்ஏவை எந்த புதிய வகை சேதத்திலிருந்தும் பாதுகாக்கின்றன. இவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க உதவும்.
தினமும் சுமார் 30 கிராம் அளவுக்கு பருப்பு வகை உணவை உட்கொள்வது தொற்று மற்றும் நோய்களில் இருந்து உங்களை காப்பாற்றும். இன்ஹேலர், இன்சுலின் எடுத்துக் கொண்டால், சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஏதேனும் அடிப்படை நிலைக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டால், உங்கள் மருத்துவரை தவறாமல் அணுகவும்.
ALSO READ | Omicron: இதுவரை ஒமிக்ரான் தொற்றில்லாத 11 மாநிலங்கள்..! எவை?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR