ஒமிக்ரான் (Omicron) தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக பரவிய கொரோனா தொற்றின் மாறுபாடுகள் அடுத்தடுத்து உருமாறிய வகையில் மக்களை அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது. சார்ஸ் கோவிட் 2வில் இருந்து பிறழ்வடைந்து பரவிய டெல்டா வேரியண்ட் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
ALSO READ | உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலை தள்ளி வைக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் பரிந்துரை
முதல் அலை முடிந்துவிட்டதே என நிம்மதியடைந்த மக்களை, 2வது அலையில் முற்றிலுமாக வதைத்துவிட்டது. தடுப்பூசிகளின் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு, மெதுவாக அனைவரும் ஆசுவாசமடைந்த நிலையில், தற்போது ஓமிக்ரான் என்ற மற்றொரு பிறழ்வு வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 3வது அலைக்கு வித்திட்டுள்ள இந்த வைரஸ் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஜெட் வேகத்தில் பரவுகிறது. நாடு முழுவதும் இதுவரை ஒமிக்ரான் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில் 88 பேரும், டெல்லியில் 67 பேரும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானா, தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களில் 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டும்மொத்தமாக 17 மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஜார்க்கண்ட், பீகார், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், அசாம், மேகலயா, திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், ஹிமாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய 11 மாநிலங்களில் ஒருவர் கூட ஒமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்படவில்லை. சில மாநிலங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தாலும், ஒமிக்ரான் தொற்றினால் யாரும் பாதிக்கப்படவில்லை.
ALSO READ | ஒமிக்ரான் பரவலால் இந்தியாவில் மீண்டும் ஊரடங்கா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR