பாகற்காய் மிகவும் கசப்பானது தான். ஆனால் எண்ணற்ற ஆரோக்கிய நலன்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் அடிக்கடிபாகற்காயை ஏதோ ஒரு வடிவில் எடுத்துக் கொள்வது, இரத்த சர்க்கரையை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது.  அதுமட்டுமல்ல, பாகற்காய் ஆரோக்கியமான இதயத்தை கொடுக்கும். ஆனால் பாகற்காயை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான். பாகற்காயை தினமும் உட்கொள்வது ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.  பாகற்காயை சாப்பிடும் போது யாரெல்லாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்  என்பதை அறிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கல்லீரல் பாதிப்பு


நீரிழிவு நோயாளிகள் தினமும் பாகற்காய் சாற்றை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. ஆனால் பாகற்காய் சாறு குடிப்பது நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் என்றாலும் கல்லீரலை பாதிக்கலாம். இது கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தினமும் பாகற்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மறுபுறம், உங்களுக்கு கல்லீரல் தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருந்தால், பாகற்காய் சாப்பிடக்கூடாது.


மேலும் படிக்க | Fibromyalgia: உடல் வலியை அலட்சியம் செய்ய வேண்டாம்; தசைநார் வலி நோய் காரணமாக இருக்கலாம்


கர்ப்பிணி பெண்கள்


பாகற்காய் சாறு அதிகம்  உட்கொள்வதால், மாதவிடாய் சுழற்சி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அதே சமயம், கர்ப்ப காலத்தில் பாகற்காய் அதிகமாக உட்கொள்வது கருச்சிதைவை ஏற்படுத்தக் கூடும், எனவே கர்ப்பிணிகள் பாகற்காய் சாறு குடிப்பதை தவிர்க்க வேண்டும்.


குறைந்த சர்க்கரை அளவு உள்ள நோயாளிகள்


பாகற்காய் சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இரத்த சர்க்கரை குறைவாக உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிடக்கூடாது. இது உங்கள் சர்க்கரை அளவை மேலும் குறைக்கலாம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ