மருத்துவ குணம் கொண்ட கருப்பு மிளகு கடுமையான நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது. ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி, தினமும் ஒரு குருமிளகை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பல நோய்களில் இருந்து விடுபடலாம். கருப்பு மிளகு பல மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு மசாலா. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கருப்பு மிளகு ஆயுர்வேதத்தில் ஒரு மூலிகையாக பார்க்கப்படுகிறது. கருப்பு மிளகு பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. ஆயுர்வேத நிபுணர் டாக்டர் திக்ஷா பவ்சரின் கூற்றுப்படி, கருப்பு மிளகு ஆயுர்வேதத்தில் சர்வ ரோக நிவாரணி என்று அழைக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆயுர்வேதத்தின் படி, எந்த நோய்களுக்கு கருப்பு மிளகு பயனுள்ளதாக இருக்கும்?
இருமல் மற்றும் சளி குணமாகும்
பசியின்மையிலிருந்து நிவாரணம் தருகிறது
நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது
மூட்டுகள் மற்றும் குடல் அழற்சியைக் குறைக்க உதவுகிறது


மேலும் படிக்க | உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையாமல் இருக்க இந்த பழங்களை அவசியம் டயட்டில் சேர்க்கவும்


உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது
செரிமானத்தை மேம்படுத்துகிறது
வாய் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்
அடைபட்ட மூக்கை திறக்கிறது
இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது
கருப்பு மிளகு, உடல் பருமனை குறைக்க உதவுகிறது
கல்லீரல் மற்றும் இதயத்திற்கு சிறந்தது
கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது
அல்சைமர் மற்றும் பிற மூளை பிரச்சனைகளுக்கு உதவியாக இருக்கும்
பொடுகு மற்றும் முடி உதிர்தல் பிரச்சனையில் பயனுள்ளதாக இருக்கும்
புற்றுநோய் செல்களைத் தடுக்கவும், எதிர்த்துப் போராடவும் உதவுகிறது
நோய்களைத் தடுக்கவும், நல்ல ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் தினமும் 1 கருப்பு மிளகு போதும்.


மேலும் படிக்க | Detoxify: உடலில் சேரும் நச்சுக்களை நீக்க இவற்றை டயட்டில் சேர்க்கவும்


காலையில் வெறும் வயிற்றில் கருப்பு மிளகை மென்று சாப்பிடலாம். இது, ஹார்மோன் சமநிலை, நீரிழிவு நோய், மாதவிலக்கு, மாதவிடாய் தாமதம் மற்றும் எல்லாவற்றிற்கும் நல்ல பலனளிக்கும். நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் சுவாச பிரச்சனைகளுக்கு, 1 தேக்கரண்டி மஞ்சள் மற்றும் கருப்பு மிளகை தேனுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.


ஒரு சிட்டிகை சுக்குக்ப் பொடியை பாலில் கலந்து குடித்தால், ஆழ்ந்த தூக்கம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த, 1 டீஸ்பூன் பசுவின் நெய்யுடன் குருமிளகுத்தூளை சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஆரோக்கியத்திற்கு ஹாய் சொல்லும் குருமிளகு நோய்களுக்கு பை பை சொல்லும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ