இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இந்த கீரையை பயன்படுத்துங்க
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முருங்கை இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அத்தகைய நோயாளிகளுக்கு முருங்கை இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது, நீங்கள் தொடர்ந்து முருங்கை இலையை உட்கொண்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம் குறையும். இருப்பினும், சிலருக்கு முருங்கை இலைகளை எப்படி சாப்பிடுவது என்று தெரியாது. எனவே அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.
பற்களை வலுவாக்கும்
உண்மையில் முருங்கைக்காயில் பல சத்துக்கள் காணப்படுகின்றன. முருங்கை இலைகளைப் பயன்படுத்துவதால் உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும். அதேபோல் முருங்கை இலை கஷாயத்தை காலையில் உட்கொள்வது அதிக நன்மை பயக்கும். மேலும் இதைப் பயன்படுத்துவது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், பற்களையும் வலுப்படுத்த உதவும்.
முருங்கை இலை கஷாயம் செய்வது எப்படி
முருங்கை இலைகளின் சாறு அல்லது கஷாயம் தயாரிக்க, முதலில் இரண்டு கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் சூடாக்கவும். பிறகு தண்ணீர் கொதித்ததும் அதனுடன் முருங்கை இலையைச் சேர்த்துக்கொள்ளவும். தண்ணீர் பாதியாக குறையும் வரை இந்த தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதன் பிறகு, நீங்கள் கருப்பு மிளகு தூள் மற்றும் உப்பை சேர்க்கலாம். பிறகு இந்த ஜூஸை வடிகட்டி குடிக்கவும்.
முருங்கை இலையில் இருக்கும் நன்மைகள்
* முருங்கை இலையில் கால்சியம் அதிகம் உள்ளது. இத்னால் இவை எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாக்குவதுடன், எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
* இது இரத்தம் மற்றும் உடல் திசுக்களை சுத்தம் செய்ய உதவுகிறது. இது இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தை நீக்கி சுத்தப்படுத்துகிறது.
* சர்க்கரை நோயாளிகளும் மற்றும் இதய நோயாளிகளும் இந்த ஜூஸை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும்.
* முருங்கை இலையை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். இதன் இலைகளில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் பைட்டோ நியூட்ரியண்ட்கள் நிறைந்துள்ளன. எந்தவொரு தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும் இவை உதவுகின்றன. முருங்கையில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
* முருங்கைக்காய் சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு அதிக ஆற்றல் கிடைக்கிறது. இது சோர்வு பிரச்சனையை நீக்குகிறது. முருங்கை இலையில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால், தூக்கம் மற்றும் பலவீனத்தை நீக்க உதவுகிறது.
* முருங்கை இலைகளை சாப்பிடுவதன் மூலம், கெட்ட கொலஸ்ட்ரால் குறைகிறது. இது இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR