நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ்

Hair Care Tips: இன்றைய மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் இளம் வயதிலேயே முடி வெள்ளையாகி வருகிறது. அதற்கு ஒரு அற்புதமான இயற்கை வைத்தியத்தை இங்கே காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 1, 2022, 04:55 PM IST
  • முடி பிரச்சனைகளை நீக்கும் கொய்யா இலை.
  • கொய்யா இலைகளைப் பயன்படுத்தி வெள்ளை முடிக்கு நிவாரணம் காணலாம்.
  • விளைவு சில நாட்களில் தெரியும்.
நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ் title=

தங்கள் கூந்தல் அடர்த்தியாகவும், மென்மையாகவும், கருமையாகவும், நீளமாகவும் இருக்க வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுகிறார்கள். இதற்கு பல வழிகளில் முயற்சிகளையும் செய்கிறார்கள். சிலர் சிறந்த என்ணெயை தேடுகிறார்கள், சிலர் ஹேர் மாஸ்க் பயன்படுத்துகிறார்கள், சிலர் ரசாயனங்கள் கலந்த ஷாம்பூக்களை நாடுகிறார்கள்.

கூந்தலில் பயன்படுத்த மிக எளிதான, முடி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதான, எந்த பக்க விளைவுகளும் இல்லாத, இயற்கையான, மிகவும் பயனுள்ள ஒரு தீர்வை இந்த பதிவில் காணலாம். கூந்தலை காக்கும் அருமருந்தாக பயன்படும் அந்த தீர்வு வேறெதுவும் இல்லை, கொய்யா இலைகள்தான். 

கொய்யா இலை கூந்தலுக்கு சிறந்தது
கொய்யா இலையில் பல சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது முடி மற்றும் தோலுக்கு நன்மை பயக்கும். கொய்யா இலையை கூந்தலுக்கு பல வழிகளில் பயன்படுத்தலாம். கொய்யா இலைகளை எந்த வகையில் கூந்தலில் பயன்படுத்தி அதிகப்படியான பலன்களை பெறுவது என காணலாம். 

கொய்யா இலையை கூந்தலில் இந்த வழியில் பயன்படுத்தலாம்

1. கொய்யா இலைகள் கொண்டு ஹேர் பேக் செய்யுங்கள்

- 15 முதல் 20 கொய்யா இலைகளைக் கழுவி உலர வைக்கவும்.

- மிக்சியில் தண்ணீர் சேர்த்து இதை பேஸ்ட் செய்யவும்.

- இப்போது இந்த பேஸ்ட்டை ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.

- அதன் பிறகு, அந்த பேஸ்டை உங்கள் உச்சந்தலை மற்றும் தலைமுடியில் தடவவும்.

- சில நிமிடங்கள் வரை கைகளால் மெதுவாக மசாஜ் செய்யவும். 

- இப்போது ஹேர் பேண்ட் உதவியுடன் முடியைக் கட்டி 30-40 நிமிடங்கள் அப்படியே விடவும். 

- பேஸ்ட் காய்ந்ததும், சாதாரண நீர் கொண்டு முடியை கழுவவும்.

- தலைமுடியைக் கழுவ லேசான ஷாம்பூவைப் பயன்படுத்தவும்.

-வாரம் இருமுறை இந்த பேஸ்ட் செய்து தடவி வந்தால் முடி வளர்ச்சி வேகமடையும்.

மேலும் படிக்க | Guava Leaves: எடை இழப்புக்கு உதவும் கொய்யா இலையின் மேஜிக் பானம்

2. கொய்யா இலைகளை எண்ணெயுடன் பயன்படுத்தவும்

- சில கொய்யா இலைகளை கழுவி ஒரு பிளெண்டரில் போட்டு கெட்டியான பேஸ்ட்டை தயார் செய்யவும்.

- இப்போது அதில் ஒரு சின்ன வெங்காயம் சேர்த்து ப்யூரி செய்யவும்.

- பின்னர் அதை ஒரு துணியில் போட்டு பிழிந்து சாறு எடுக்கவும்.

- இப்போது வெங்காயச் சாற்றில் கொய்யா இலை மற்றும் தேங்காய் எண்ணெய் விழுது கலந்து கொள்ளவும்.

- இதனை உச்சந்தலையில் தடவி விரல்களால் நன்றாக மசாஜ் செய்யவும்.

- அரை மணி நேரம் கழித்து கழுவவும்.

3. கொய்யா இலை தண்ணீரை எவ்வாறு பயன்படுத்துவது

- சில கொய்யா இலைகளை கழுவவும்.

- இப்போது அவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்கவும்.

- 15 முதல் 20 நிமிடங்கள் கொதித்த பிறகு ஆறவிடவும்.

- ஆறியதும் வடிகட்டி ஒரு பாட்டிலில் சேமித்து வைக்கவும்.

- அதன் பிறகு, உங்கள் தலைமுடியை லேசான ஷாம்பு கொண்டு கழுவவும்.

- முடியை உலர்த்திய பின், ஸ்ப்ரே பாட்டிலில் கொய்யா இலை தண்ணீரை விட்டு முடியின் வேர்களில் படும்படி ஸ்ப்ரே செய்யவும். 

- 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.

- அடுத்த சில மணிநேரங்களுக்கு இதை அப்படியே தலைமுடியில் இருக்க விடவும்.

- அதன் பிறகு, தலைமுடியை வெற்று நீரில் கழுவவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | மதிய உணவுக்குப் பிறகு இந்த 3 தவறுகளைச் செய்யக்கூடாது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News