நிமிடங்களில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் ஜூஸ்! நீரிழிவுக்கு அருமருந்து
Blood sugar Control: இரத்த சர்க்கரையை நிமிடங்களில் கட்டுப்படுத்தி அருமருந்தாக செயல்படும் அற்புதமான ஒரு காய் தொடர்பான முழுமையான பயன்கள்
Taro Root For Diabetes: நவீன வாழ்க்கை முறை மற்றும் மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களுக்கு மத்தியில், பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதுதான். நீண்ட காலமாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், நீரிழிவு போன்ற குணப்படுத்த முடியாத நோய் ஒருவரின் வாழ்நாளை குறைத்துவிடுகிறது.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த பலரும் பல்வேறு உதவிக் குறிப்புகளை சொன்னாலும், உண்மையில் இரத்த சர்க்கரையை நிமிடங்களில் கட்டுப்படுத்தி அருமருந்தாக செயல்படும் அற்புதமான ஒரு காய் தொடர்பான முழுமையான பயன்கள் பலருக்கும் தெரியவில்லை.
நீரிழிவு என்பது அந்த அமைதியாக உள்ளிருந்தே, நம்மை சீரழிக்கும் நோய்களில் ஒன்றாகும், உடலில் உருவாகிய சர்க்கரை நோய் கொஞ்சம் கொஞ்சமாக ஒருவரை ஆக்ரமித்துக் கொள்கிறது. இதனால்தான் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான சர்க்கரை நோயாளிகள் உருவாகியுள்ளதற்க் உகாரணமாக இருக்கிறது.
மேலும் படிக்க | இந்த சூப்பர் ஃபுட்களை நீங்கள் சரியான முறையில் சாப்பிடுகிறீர்களா?
இந்தியாவில் 101 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்க்கு இதுவரை சரியான சிகிச்சை இல்லை. உணவு முறையிலும், வாழ்க்கை முறையிலும் மாற்றங்களைச் செய்தால் மட்டுமே நீரிழிவைக் கட்டுப்படுத்த முடியும்.
ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த ஆயுர்வேதம், அலோபதி முதல் உணவு வரை பல வழிமுறைகள் உள்ளன, இவை இரத்த சர்க்கரையை குறைக்கின்றன. ரத்த சர்க்கரை அளவை உடனடியாக கட்டுப்படுத்தும் ஒரு இலை உள்ளது, இதன் சாற்றை குடிப்பதால், இரத்த சர்க்கரை சில நிமிடங்களில் குறையும்.
சர்க்கரை நோய்க்கு மருந்து குறித்து ஒரு ஆராய்ச்சியும் செய்யப்பட்டது, அதில் இந்த இலையின் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டின் அற்புதமான பயன் தெரியவந்துள்ளது.
சேப்பங்கிழங்கு வறுவல் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும். ஆனால், அதன் இலைகளில் பொதிந்துள்ள மருத்துவ குணங்களைப் பற்றி பொதுவாக யாருக்கும் தெரிவதில்லை.
டாரோ ரூட் (Taro root) என ஆங்கிலத்தில் அறியப்படும் சேப்பங்கிழங்கில் நார்ச்சத்து மற்றும் எதிர்ப்பு மாவுச்சத்து நிறைந்துள்ளது, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், இதய நோயைத் தடுக்கவும் மற்றும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
சேப்பங்கிழங்கில், ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. செல்லுலோஸ், பெக்டிக் பாலிசாக்கரைடுகள் மற்றும் கால்சியம் ஆக்சலேட் மட்டுமல்ல, நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள், பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி, ஈ. ஆர்பி என பல சத்துக்கள் இதில் உள்ளன. இவற்றில் பல, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. மேலும், இதய நோய்களைத் தடுத்து, புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது என்பது சேப்பங்கிழங்கின் மகத்துவமான பண்புகள் ஆகும்.
மேலும் படிக்க | இன்சுலின் உற்பத்தியை தூண்டி... நீரிழிவை ஒழித்துக் கட்டும் ‘சில’ ஆயிர்வேத உணவுகள்!
சேப்பங்கிழங்கில் மட்டுமல்ல, அதன் இலையிலும் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. தேசிய சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்விலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சில எலிகளுக்கு 250 மி.கி மற்றும் 500 மி.கி கொலோகாசியா (சேப்பங்கிழங்கில் தாவரவியல் பெயர்) இலை சாறு கொடுக்கப்பட்டதாக ஆய்வு கூறுகிறது. இதற்குப் பிறகு சிறிது நேரத்தில், எலிகளின் இரத்த சர்க்கரை திடீரென குறைந்தது. இந்த ஜூஸைக் குடித்ததும், சீரம் கிரியேட்டினின், இரத்த யூரியா நைட்ரஜன் மற்றும் BUN அளவும் வெகுவாகக் குறைந்துள்ளது. இந்த அடிப்படையில் சேப்பங்கிழங்கு இலை, சர்க்கரை நோய்க்கு அருமருந்து என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேப்பங்கிழங்கு இலையில் உள்ள சத்துக்கள்
வைட்டமின்கள் A, B6, C, E முதல் நார்ச்சத்து, ஃபோலேட், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, மாங்கனீஸ், துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் இவற்றில் காணப்படுகின்றன. அவை இரத்த சர்க்கரையை பராமரிக்கின்றன. ஆர்பி என்று இந்தியாவில் அறியப்படும் சேப்பங்கிழங்கின் இலைகளில் குறைந்த கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது.
மேலும் படிக்க | நீரிழிவு நோய் இருப்பவர்கள் இந்த 3 ஜூஸ் குடித்தால் சர்க்கரையை கட்டுப்படுத்தலாம்
சேப்பங்கிழங்கில் உள்ள கலோரிகளின் அளவும் மிகக் குறைவு. எடையைக் குறைப்பது, இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கு இது பயனுள்ளதாக இருக்கும். இந்த இலைச்சாறு வழக்கமான நுகர்வு, நீரிழிவு நோயாளிகளுக்கு சஞ்சீவி மருந்து என்றே சொல்லலாம்.
சேப்பங்கிழங்கு இலைகளின் சாற்றை தொடர்ந்து குடிப்பதால் இரத்தத்தில் சர்க்கரை உடனடியாக குறையும், அது திடீரென அதிகரிக்காது. இவற்றில் உள்ள மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். இதனுடன், செரிமானத்தையும் சீர் செய்கிறது இந்த அற்புதமான இலைச்சாறு.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், இரத்த அழுத்தம், கண்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றிற்கும் சிறந்த இந்த சேப்பங்கிழங்கு இலைச் சாறு குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பாக்டீரியா நோய்கள் நெருங்கவே நெருங்காது.
(பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)
மேலும் படிக்க | நரை முடிக்கு கண்ட ஹேர் டை வேண்டாம், இந்த ஹோம்மேட் ஹேர் டை ட்ரை பண்ணுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ