நீரிழிவை நிர்மூலமாக்கும் நோனி பழம்... தினம் 30மிலி ஜூஸ் போதும்!
Noni Fruit For Diabetic Control: நீரிழிவு நோய் உங்கள் வாழ்க்கையை கடினமாக்கும் கடுமையான நோய்களில் ஒன்றாகும். இந்த நோயை குணப்படுத்த முடியாது. அதைக் கட்டுப்படுத்துவதுதான் ஒரே தீர்வு.
சமீப காலமாக, மோசமான வாழ்க்கை முறை, உணவு பழக்கம் ஆகியவற்றின் காரணமாக சர்க்கரை நோய் ஒரு தீவிர பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2050ம் ஆண்டுக்குள் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 130 கோடியை எட்டும் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, உடல் உறுப்பு பாதிப்பு மற்றும் இறப்பு ஏற்படும் சம்பவங்களும் அதிகரிக்கிறது. இந்த நோய்க்கு நேரடி சிகிச்சை இல்லை. இந்த நோய் மிகவும் ஆபத்தான நோய்களில் ஒன்றாக இருப்பதற்கு இதுவே காரணம். ஒரு நபர் தனது வாழ்நாள் முழுவதும் இந்த நோயை கட்டுப்பத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதன் மூலம் மட்டுமே அதன் அறிகுறிகளைத் தடுக்க முடியும்.
அத்தகைய சூழ்நிலையில், நீரிழிவு நோயைத் தவிர்க்க சரியான உணவுடன், உடற்பயிற்சியும் மிகவும் முக்கியமானது. அதே நேரத்தில், அதற்கான வீட்டு வைத்தியங்களையும் பின்பற்றுவது சிறந்த தீர்வைக் கொடுக்கும். அற்புதமான இந்த நோனி பழத்தின் சாறு இந்த ஆபத்தான நோயிலிருந்து உங்களைக் காப்பாற்றும். நோனி பழத்தை பற்றி அதிகம் யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இந்த பழம் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. இதன் நன்மைகளை பற்றி அறிந்தால் ஒரு முறையாவது இந்த பழத்தை உபயோகிக்க நினைப்பீர்கள். பலருக்கு இந்த பழத்தின் பெயர் புதியதாக இருக்கும். இந்த பழம் அதிகமாக பயன்பாட்டில் இல்லை. ஆனால் ஆயுர்வேதத்தில் முக்கியமான பழமாக நோனி உள்ளது.
சர்க்கரை நோயை எளிதில் கட்டுப்படுத்தும்
பச்சை நிறத்தில் இருக்கும் இந்த பழம் சர்க்கரை நோய் (Diabetes) போன்ற கொடிய நோயை எளிதில் கட்டுப்படுத்தும். அதன் அறிகுறிகளைத் தடுப்பதோடு, இரத்த சர்க்கரையைக் குறைப்பதன் மூலம் நீரிழிவு ஏற்படுவதற்கான அபாயத்தையும் தடுக்கிறது. இந்த பழத்தின் சாற்றை தொடர்ந்து உட்கொள்வது நன்மை பயக்கும். இந்தப் பழம் ஆயுர்வேதத்தில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
நோனி பழம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி
பசுமையான மரங்களில் நோனியும் ஒன்று. இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகிறது. சர்க்கரை நோய் போன்ற கொடிய நோய்களுக்கு மருந்தாக செயல்படுகிறது. இப்பழத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் பல கொடிய நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன. இந்த பழம் இரத்த சர்க்கரையை எளிதில் கட்டுப்படுத்துகிறது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், நீரிழிவு நோயாளிகளுக்கு 30 மில்லி நோனி சாறு 3 வாரங்களுக்கு தொடர்ந்து கொடுக்கப்பட்டது. இதையடுத்து, அவரது ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்தபோது, அது கட்டுக்குள் இருந்தது தெரிய வந்தது.
மேலும் படிக்க | உடல் பருமன் முதல் ரத்த கொதிப்பு வரை.... நோய்களை நிர்மூலமாக்கும் பீட்ரூட் ஜூஸ்!
இன்சுலினை சுரக்க செய்யும் நோனி பழம்
நோனி பழத்தில் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இது இன்சுலின் சுரப்பை அதிகரிப்பதன் மூலம் உயர் இரத்த சர்க்கரையை எளிதில் குறைக்கிறது. இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கின்றன. இது நீரிழிவு நோயிலிருந்து எளிதாக நிவாரணம் அளிக்கிறது. அதே நேரத்தில், நீரிழிவு நோய் இல்லாதவர்களும் இதனை உட்கொள்ளும் போது, நீரிழிவு ஏற்படும் ஆபத்து தவிர்க்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதன் சாற்றை தவறாமல் குடிக்க வேண்டும். இந்த பழத்தின் சாற்றை உங்களால் குடிக்க முடியாவிட்டால் அதன் இலைகளை மென்று சாப்பிடுங்கள். இவற்றில் காணப்படும் கலவைகள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை செயல்படுத்துகிறது. இவற்றால் வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் இருக்காது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | முட்டையை பச்சையாக குடிக்கலாமா? ஆஃப் பாயில் முட்டை ஆரோக்கியத்திற்கு ஆதரவளிக்குமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ