க்ரீன் டீயை போலவே உடலையும், மூளையையும் சுறுசுறுப்பாக வைக்க ப்ளூ டீ உதவுகிறது -விவரம் உள்ளே!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனிதனாய் பிறந்த அனைவருக்கும் தங்களின் மனதில் நீண்ட காலமாக ஓடிகொண்டே இருக்கும் ஒரு விஷயம் உடல் எடை பற்றிய கவலை. உடல் எடை குறைவாக இருந்தாலும் கவலை படுகிறோம், எடை அதிகமாக இறந்தாலும் கவலை படுகிறோம். 


உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு டீ, காபி குடிப்பதை பெரும்பாலானோர் தவிர்த்து வருகின்றனர். அதற்கு பதிலாக க்ரீன் டீ குடிக்க ஆரம்பித்தனர். அது உடலுக்கு புத்துணர்வு அளிப்பதுடன் மன சோர்வை நீக்கி, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதாக ஆராய்ச்சிகளில் கூறப்பட்டது.


தற்போது க்ரீன் டீயை போலவே ‘ப்ளூ டீ’ என்ற ஒன்று அறிமுகமாகியுள்ளது. இது உடலில் உள்ள அதிகபடியாக நச்சுக்களை நீக்கி, கல்லீரலுக்கு புத்துணர்ச்சியை உண்டாக்குகிறது. இதனால் அஜீரண கோளாறுகள் குணமடைவதாக கூறப்படுகிறது.


ப்ளூ டீ-யில் உள்ள ஆண்டி-க்ளைகேஷன், சருமத்தை மென்மையாக்கி, வயது முதிர்வை கட்டுப்படுத்துகிறது. ப்ளூ டீ குடிப்பதனால் உச்சந்தலையில் ரத்த ஒட்டத்தை அதிகரிக்கச் செய்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.


மேலும், இந்த ப்ளூ டீ நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த மருந்தாக இருக்கிறது. ப்ளூ டீ குடிப்பதனால், நீரிழிவு பிரச்னைகள் குறைந்து, அதன் காரணமாக ஏற்படும் இதய கோளாறுகளை சரி செய்கிறது. புற்றுநோயின் வீரியத்தை குறைக்கவும் ப்ளூ டீ பயன்படுகிறது.