பொதுவாக உடல் எடையைக் குறைக்க தினசரி உணவில் ஓட்ஸ், சப்பாத்தி, பழங்கள், அதிக அளவு காய்கறிகளை எடுத்துக்கொண்டு, டயட்டை மேற்கொள்வோம். இது உங்கள் வயிற்றை  நிரப்புவதோடு, உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவ்வாறு ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ளும் போது, உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். அதே சமயம் உடல் ஆரோக்கியமும் மேம்படும்.


தற்போது  உடல் எடையை எளிமைய குறைக்க நீங்கல் ஐஸ் தண்ணீரில் குளித்தால் போதும் என்னென்றால் இதில் உள்ள குளிர் உடலின் வெப்பநிலையை மற்றும் ஹார்மோன்களின் அளவை அதிகரித்து கலோரிகளை அதிகளவில் கரைக்கச் செய்யும்.


மேலும், ஐஸ் நீரில் குளியலை மேற்கொள்ளும் போது, அது கொழுப்பு செல்களைக் கரைக்கும் ஐரிஸின் என்னும் ஹார்மோன்களின் அளவை அதிகரித்து, வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவும்.


உடல் எடை குறைய தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், உடலில் கொழுப்புக்கள் சேராது. மேலும் இதனை தொடர்ந்து குடித்து வந்தால் பசி கட்டுப்படும். இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.


தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து குடித்து வர, உடல் எடை குறைய ஆரம்பிப்பதை நன்கு உணர முடியும்.


நீங்கள் உண்மையில் குறைந்த பட்சம் 30 முதல் 60 நிமிடங்கள் வரை தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஒரே நேரம் செய்ய முடியவில்லை என்றால் அதில் ஒரு தவறும் இல்லை, நீங்கள் நாள் முழுவதும் சிறு சிறு பகுதியாக பிரித்தும்  செய்யலாம்.
 
24 மணிநேரத்தில் உடலில் இருக்கும் 72 காலரியை எரிக்கும் தன்மை கொண்டது இந்த க்ரீன் டீ. உங்கள் உடலின் இயக்கத்தை மேலும் அதிகரிக்கும் இந்த க்ரீன் டீ வருடத்திற்கு 7.3 பவுண்ட் உடல் எடையைக் குறைக்கும்.


இவைகள் உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.