சுரைக்காய் (Bottle gourd) பல விதமான நோய்களுக்கு மருந்தாகும். தினசரி உணவில் சுரைக்காயை சேர்த்தால் இரத்த சர்க்கரை குறையும் என்பதோடு, பல வித நோய்களுக்கு தீர்வாக உள்ளது எனபது பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுரைக்காய் (Bottle gourd) நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது 92 சதவிகிதம் நீர் மற்றும் 8 சதவிகிதம் நார்ச்சத்து கொண்டது. சர்க்கரை மற்றும் குளுக்கோஸின் அளவு மிகக் மிக குறைவு என்பதால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது. தினசரி உணவில் சுரைக்காயை சேர்த்தால் இரத்த சர்க்கரை குறையும் என்பது பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. 2012-13 ஆம் ஆண்டில், இந்திய இரசாயன தொழில்நுட்ப நிறுவனம் ஒரு ஆய்வை நடத்தியது. 


நீரிழிவு நோய் வருவதற்கான முக்கிய காரணம் இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராகச் சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது அல்லது இன்சுலின் சரியாக வேலை செய்யாதது  ஆகியவற்றை கூறலாம். இன்சுலின் குறைபாட்டை சுரைக்காய் சரி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ | Health Alert! மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ‘சில’ உணவுகள்.!!!


 2025 ஆம் ஆண்டுக்குள், உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 170 சதவிகிதம் அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. மருந்துகள் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது சாத்தியம் என்றாலும், மருந்துகள் இல்லாமல் உணவு முறையை மாற்றுவதன் மூலம், நமது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இரத்தத்தில் சர்க்கரையை குறைப்பது மட்டுமல்லாமல் வேறு பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.


சுரைக்காய் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது- உடலுக்கு குளிர்ச்சியை வழங்குவதில் சுரைக்காய்க்கு முக்கிய பங்கு உண்டு. இது ஒரு காய்கறியாக சமைத்து சாப்பிடுவதை விட அதன் சாறு  மிகவும் நன்மை பயக்கும்.


சிறுநீரக நோய்களை குணப்படுக்கிறது-  சுரைக்காயின் சாறு குடிப்பது சிறுநீர் நோய்களைக் குணப்படுத்துகிறது. இந்த சாறுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது சிறுநீர் நோய்களை குணப்படுத்த சிறந்த வீட்டு வைத்தியம்.


ALSO READ | அழகான கேசத்திற்கான Keratine சிகிச்சை; அதிக செலவில்லை, பழைய சாதம் போதும்


அமிலத்தன்மையைக் குறைக்கிறது-  உங்களுக்கு அமிலத்தன்மை பிரச்சனையுடன் போராடுகிறீர்கள் என்றால், சுரைகாயை உட்கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும். இதில் உள்ள நார் சத்து அமிலத்தன்மையை அகற்ற உதவுகிறது.


சுரைக்காய் முடியை வெண்மையாக்க உதவுகிறது-  இளம் வயதிலேயே முடி நரைப்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. தினமும் ஒரு கிளாஸ் சுரைக்காய் சாறு குடிப்பதால், முடி நரைக்காமல் இருப்பதோடு,  முடியும் அடர்த்தியாக  வளரும்


மன அழுத்தத்தைக் குறைக்கிறது- சுரைக்காயில் போதுமான அளவு கோலின் உள்ளது, இது நமது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இதனால் மன அழுத்தம் போன்ற மன நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.


ALSO READ | Health Tips: கொத்தரவரங்காயை சாதாரணமாக எடை போட வேண்டாம், வியக்கத்தக்க நன்மைகள் உள்ளன


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR