Health Tips: கொத்தரவரங்காயை சாதாரணமாக எடை போட வேண்டாம், வியக்கத்தக்க நன்மைகள் உள்ளன

நம்மில் பலருக்கு கொத்தவரங்காயின் குண நலன்கள் பற்றி தெரியாது. இதுவும் பீன்ஸ் வகை தான் என்றாலும், அதிகமானோர் இதை வாங்குவதில்லை என்றே கூறலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 5, 2021, 06:54 PM IST
  • கொத்தரவரங்காய்கள் கால்ஷியம் பற்றாக்குறை உள்ளவர்களுக்கு சிறந்த தேர்வாகக் கருதப்படுகின்றன.
  • கொத்தவரங்காயில் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளது.
  • பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் எலும்புகளை வலிமையாக்குகின்றன.
Health Tips: கொத்தரவரங்காயை சாதாரணமாக எடை போட வேண்டாம், வியக்கத்தக்க நன்மைகள் உள்ளன title=

நம்மில் பலருக்கு கொத்தவரங்காயின் குண நலன்கள் பற்றி தெரியாது. இதுவும் பீன்ஸ் வகை தான் என்றாலும், அதிகமானோர் இதை வாங்குவதில்லை என்றே கூறலாம். 

கொத்தரவரங்காய் எனப்படும் க்ளஸ்டர் பீன்ஸில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை இன்று அறிந்து கொள்ளலாம்.  இந்த காய்கறி சுவையில் அற்புதமானது என கூற இயலாது, ஆனால் அதன் குண நலன்களை பற்றி பேசினால், அது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் காய்கறியாக உள்ளது. கொத்தரவரங்காயில், ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

அதனை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால், உடல் எடையைக் குறைக்கலாம், என்பதோடு இதயம் தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வாக இருக்கும். பலர் இதை சாலட் போல் பச்சை காய்கறியாக சாப்பிட பயன்படுத்துகிறார்கள்.

கிளஸ்டர் பீன்ஸ், அதாவது கொத்தரவங்காய் 

- இது வெப்ப மண்டல நாடுகளில் பயிரிடப்படுகிறது.

- இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் கொத்தவரங்காய் அதிகம் பயிரிடப்படுகின்றன.

- அதன் அறிவியல் பெயர் 'சாயா மோடிஸ்கஸ் டெட்ராகோனோலோபஸ்'.

- ஆங்கிலத்தில் இது கிளஸ்டர் பீன் என்று அழைக்கப்படுகிறது..

- பல மருத்துவ குணங்கள் இதில் காணப்படுகின்றன, அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
கொத்தவரங்காயின் நன்மைகள்

ALSO READ | Health Tips: உங்களை ‘FIT’ ஆக வைத்திருக்கும் DIET ப்ளான்கள்..!!

 

1. கொழுப்பைக் குறைக்க உதவுகிறது
ஆயுர்வேத நிபுணர் டாக்டர் அப்ரார் முல்தானி கொத்தரவரங்காய் பற்றி குறிப்பிடுகையில், இதில் நார் சத்து அதிகம் காணப்படுகிறது என்கிறார். அதனால், இது கொழுப்பைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கொத்தரவரங்காய் இதயத்திற்கு. நல்லது, ஏனெனில் இது எல்.டி.எல் அல்லது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் ஆகியவை இருதய பிரச்சினைகள் வரமால் பாதுகாக்கின்றன.

ALSO READ | மாம்பழம் சாப்பிட்ட பின் எடுத்துக் கொள்ளக் கூடாத 5 உணவுகள்

 

2. நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்
நீரிழிவு நோயாளிகள் தவறாமல் கொத்தரவரங்காயை உட்கொள்ள வேண்டும். இதனால், இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதில்லை. கொத்தவரங்காயில் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளது, அதே போல் அதில் உள்ள டைனின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும்.

3. எலும்புகளுக்கு நன்மை பயக்கும்
கொத்தவரங்காய கால்சியத்தின் களஞ்சியமாக கருதப்படுகின்றன. வலுவான எலும்புகளுக்கு கால்சியம் அவசியம். எனவே, கொத்தரவரங்காய்கள் கால்ஷியம் பற்றாக்குறை உள்ளவர்களுக்கு சிறந்த தேர்வாகக் கருதப்படுகின்றன. இதில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் எலும்புகளை வலிமையாக்குகின்றன.

4. மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து நிவாரணம்
ஆயுர்வேத நிபுணர் டாக்டர் அப்ரார் முல்தானி இது பற்றிகூறுகையில், நீங்கள் மலச்சிக்கல் பிரச்சினையுடன் போராடுகிறீர்கள் என்றால், உங்கள் உணவில் கொத்தரவங்காயை கட்டாயம் சேர்க்கவும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. இதை அடிக்கடி சேர்த்துக் கொண்டால், செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

ALSO READ | ஆன்டிபாடி என்றால் என்ன; கொரோனா தொற்றுடன் போராட அது எவ்வாறு உதவுகிறது?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News