அதிக வேலை பளு காரணமாக நமது உடல் சோர்வடைவதை போலவே மூளையும் சோர்வடைகிறது. இதனால், பல சமயங்களில், சில சமயங்களில் மனம் பாரமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படத் தொடங்குகிறது. மனம் சோர்வடையும் போது தலையில் பாரம், எரிச்சல், கோபம், பதற்றம், யாரிடமும் பேச விருப்பமில்லாத நிலை போன்றவை ஏற்படுகின்றன. இந்த பிரச்சினைகள் அனைத்தும், உங்கள் மூளை ஆரோக்கியத்தை பாதிக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூளை சோர்வுக்கான காரணங்கள்


இன்றைய போட்டி நிறைந்த காலத்தில் மூளை சுறுசுறுப்பாக இருந்தால் தான், வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். மூளை சோர்வு உங்கள் அன்றாட வேலையை பாதிக்கிறது. மூளை சோர்வுக்கான காரணங்கள் ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசமாக இருக்கும். நீடித்த நோய், மருந்துகளை நீண்ட காலம் எடுத்துக் கொள்ளுதல், அதிக மன அழுத்தம் போன்றவை அனைத்தும் மன சோர்வுக்கான முக்கிய காரணமாக இருக்கலாம்.


மூளை சோர்வுக்கு நிவாரணம் தரும்ஆயுர்வேத மருந்துகள் 


மூளை சோர்வை நீக்க மூன்று ஆயுர்வேத மருந்துகள் பலன் தரும். இது நிச்சயம் உங்களுக்கு சுறுசுறுப்பான மன நிலையை கொடுக்கும். இதில் அஸ்வகந்தா, சங்கபுஷ்பம் மற்றும் பிராமி ஆகியவை அடங்கும்.


மேலும் படிக்க | Fibromyalgia: உடல் வலியை அலட்சியம் செய்ய வேண்டாம்; தசைநார் வலி நோய் காரணமாக இருக்கலாம்


அஸ்வகந்தா


அஸ்வகந்தா ஒரு தெய்வீக மருந்து, இது உங்கள் மன அழுத்தத்தை விடுவிக்கிகிறது. இந்த மருந்தை நோயின் போது மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. சுறுசுறுப்பாக இருக்கவும் இதைப் பயன்படுத்தலாம்.


பிராமி 


பிராமி உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கும். இதன் மூலம், மன சோர்வை போக்கவும், ஹார்மோன் சமநிலையை பராமரிக்கவும் உதவுகிறது. நினைவாற்றல் திறனை அதிகரிக்கவும், மறதி பிரச்சனை நீங்கவும், பிராமியை உட்கொள்வது நல்ல பலனைத் தரும்.


சங்கபுஷ்பம்


அதே சங்கபுஷ்பம் மூன்றாவது மருந்து மனதை கூர்மையாக்க மிகவும் உதவுகிறது. இது சங்கபுஷ்பம் என்று அழைக்கப்படுகிறது. இதனை உட்கொள்வதால் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ