துரித கதியில் இயங்கும் இந்த வாழ்க்கையில், உடல் பிட் ஆக இருக்க வேண்டும் எனபது போலவே மூளையும் மனமும் பிட் ஆக இருப்பதும் மிகவும் முக்கியம். ஏனென்றால் எந்த வேலையையும் செய்ய உங்கள் உடலுக்கு கட்டளை கொடுப்பது உங்கள் மூளைதான். மூளையையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், உடலும் ஃபிட்டாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனதை ஒருமுகப்படுத்த, உடற் பயிற்சி, யோகா போன்ற விஷயங்களில் பலர் ஈடுபடுகின்றனர். ஆனால் அவர்கள் தங்கள் உணவுகளில் கவனம் செலுத்துவதில்லை. நீங்கள் சாப்பிடும் உணவிற்கும் மூளையின் செயல்பட்டிற்கும் நேரடி சம்பந்தம் உண்டு எனலாம். 


நீங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், உங்கள் மூளை பலவீனமாகிவிடும். ஆனால், சிறந்த டயட்டை பின்பற்றினால் மூளை சுறுசுறுப்பகா வேலை செய்யத் தொடங்கும். எனவே காலை உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய உணவுகள் எவை என்று பார்ப்போம்.


மேலும் படிக்க | Brain Health: மூளை சோர்வு, மன பாரத்தை நீக்கும் அற்புத மூலிகைகள்


காலையில் காபி குடிக்கலாம்


காலை உணவில் காபியை நிச்சயம் சேர்த்துக்கொள்ளலாம். காபியில் நிறைய காஃபின் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதுமட்டுமின்றி, மூளை சுறுசுறுப்பகா இயங்கி, விழிப்புணர்வை அதிகரித்து, சிறப்பாக கவனம் செலுத்த முடிகிறது.


உணவில் மஞ்சளை கட்டாயம் சேர்க்கவும்


மஞ்சளின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். நோய்களைக் குறைப்பதில் மட்டுமல்ல மனதையும் கூர்மையாக்கும். இது மூளை செல்களை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும், மஞ்சளை உட்கொள்வதால் நினைவாற்றல் கூடும். இதை உங்கள் காலை உணவிலும் மஞ்சள் சேர்க்கப்பட்ட உணவு அவசியம் இருக்கட்டும்.


தினமும் முட்டை சாப்பிடுங்கள்


முட்டையில் புரதம் நிறைந்துள்ளது. இதில் வைட்டமின் பி-6 மற்றும் பி-12 உள்ளது. காலை உணவாக முட்டை சாப்பிடுவது உங்கள் உடலின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. முட்டை உணவை காலையில் உண்பதால், மூளை சிறப்பாக செயல்படும்.


மேலும் படிக்க | Heart Health: இதய நோய்களை மருந்து இல்லாமல் குணப்படுத்த செய்ய வேண்டியவை என்ன


ஆரஞ்சு பழமும் நன்மை பயக்கும்


உங்கள் உணவில் ஆரஞ்சுகளையும் சேர்த்துக்கொள்ளலாம். நீங்கள் தினமும் ஒரு ஆரஞ்சு சாப்பிடலாம். ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. வைட்டமின் சி என்பது மூளை செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களைத் தடுக்கும் ஒரு ஊட்டச்சத்து ஆகும்.


அக்ரூட் பருப்புகள் மற்றும் பாதாம்


இதனுடன், வாதுமை பருப்பு மற்றும் பாதாம் பருப்பு போன்றவை மூளையின் ஆற்றலை அதிகரிக்கும். அவை மூளையை சேதப்படுத்தும் செல்களை எதிர்க்கும் திறன் பெற்றவை. மூளை ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. மேலும் ப்ரோக்கோலியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது உங்கள் மூளையையும் மனதையும் கூர்மையாக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | இதய துடிப்பை சீராக்கும் ‘பொட்டாஷியம்’; இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR