மூளை சுறுசுறுப்பாக இருக்க.... உதவும் பயிற்சிகளும்... உணவுகளும்
Brain Health Tips: மூளை கூர்மையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க, உங்கள் அன்றாட வழக்கத்தில் சில பயிற்சிகளை செய்வதும், சில உணவுகளை சேர்த்துக் கொள்வதும் பலன் அளிக்கும்.
நம் உடலை கடுப்படுத்தும் மூளை ஆரோக்கியமாக இருந்தால் தான் உடல் ஆரோகியம் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்க எப்படி உடற்பயிற்சி தேவையோ, அதே போன்று மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மூளை பயிற்சிகள் செய்வது அவசியம். மூளை கூர்மையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கவும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும், உதவும் மூளை பயிற்சிகள் மற்றும் பழக்கங்கள் மூளையின் ஆற்றலை அதிகரிக்கன் உதவும்.
மூளைக்கான பயிற்சிகள் (Exercises that Increases Brain Power)
மனதளவில் ஆரோக்கியமாக இருக்க மூளை பயிற்சிகளை செய்வது மிகுந்த பலன் கொடுக்கும் . மூளைக்கு அதிக வேலை கொடுக்கும் செஸ், சுடோகு போன்ற விளையாட்டுகளை தினமும் விளையாடுங்கள். இந்த விளையாட்டுகள் மூளையை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் ஆக்குகிறது. இந்த விளையாட்டுகளை விளையாட தினமும் சிறிது நேரம் ஒதுக்குங்கள். அதிகாலையில் யோகா அல்லது தியான பயிற்சி செய்யுங்கள். தியானம் செய்வதன் மூலம், மூளையின் ஆற்றல் அதிகரிப்பதோடு, மனதில் நிம்மதி ஏற்படும்.
மூளையை கூர்மையாக்கும் உடற்பயிற்சி
தினமும் உடற்பயிற்சி செய்தாலும் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து, மந்த நிலை நீங்கி மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.. உடற்பயிற்சியாக நடைபயிற்சி, நடனம், தோட்ட வேலை செய்தல் அல்லது நீச்சல் என உங்களால் இயன்ற உடல் பயிற்சியை தினமும் மேற்கொள்ளவும். இதனால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் (Brain Health) நன்றாக இருக்கும்.
போதுமான தூக்கம்
தூக்கமின்மை பல உடல்நல பிரச்சனைகளை மட்டுமல்ல, மன நல பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. தூக்கமின்மையால் மூளை பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மூளை சுறுசுறுப்பாக இருக்க குறைந்தது 6 - 7 மணி நேர ஆழ்ந்த தூக்கம் அவசியம், அது நல்ல மூளை ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
மூளைக்கான உணவுகள்
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உண்பதால் மூளை ஆரோக்கியமாக இருக்கும். உங்கள் உணவில் புரதம், வைட்டமின்கள், ஒமேகா -3 மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளைச் சேர்க்கவும். இதற்கு, நட்ஸ் வகைகள், முட்டை, விதைகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை தவறாமல் உணவில் சேர்க்க வேண்டும். இது தவிர, பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், அதிக சர்க்கரை சேர்த்த உணவுகளையும் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகள் மூளையின் ஆற்றலை பாதிக்கிறது.
மேலும் படிக்க | எச்சரிக்கை... இந்த உணவுகளுடன் லெமன் டீ எடுத்துக்காதீங்க.. ஆரோக்கியத்திற்கு கேடு
உடல் பருமன்
உடல் எடை அதிகம் இருப்பது, உடலை நோய்களின் கூடாரமாக ஆக்குவதோடு, மட்டுமல்லாமல், ஒருவரது மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. உடல் எடை அதிகரிப்பதால், மூளை மந்தமாகும் வாய்ப்பு உள்ளது, ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் எதிர்மறை எண்ணங்கள் மனதில் வர ஆரம்பிக்கின்றன. அத்தகைய சூழ்நிலையில், உடல் எடையைக் கட்டுப்படுத்துவது முக்கியம்.
மூளை மந்தமானதன் அறிகுறிகள்
நினைவாற்றல் குறைதல் அல்லது ஞாபக மறதி அதிகரித்தல், புரிந்து கொள்வதில் சிக்கல்கள் ஆகியவை, மூளை மந்தமானதன் அறிகுறிகளாக இருக்கலாம். இந்த அறிகுறிகள் இருந்தால், உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உங்கள் குடல் மோசமாக உள்ளது என்பதை காட்டும் முக்கியமான 7 அறிகுறிகள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ