ஆரோக்கியமான மூளைக்கு நார்ச்சத்து மிகவும் முக்கியமானது என'நியூட்ரிஷனல் நியூரோ சயின்ஸ்' இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது. உணவு நிபுணர்கள் அனைவருமே உணவில் நார்ச்சத்து சேர்க்க  வேண்டும் என பரிந்துரைக்கின்றனர். நார்ச்சத்து போதுமான அளவு உட்கொள்வது ஒரு நல்ல செரிமான அமைப்புக்கு அவசியமானதாக கருதப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போது சமீபத்தில், ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, உணவில் நார்ச்சத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆராய்ச்சியின் மூலம், போதுமான அளவு நார்ச்சத்து உட்கொள்வது டிமென்ஷியா எனப்படும் மறதி நோய் உட்பட, மூளை தொடர்பான பல பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது என்பது தெரிய வந்துள்ளது.


முன்னணி ஆராய்ச்சியாளர் பேராசிரியர் கசுமாசா யமகிஷி, இது குறித்து கூறுகையில், 'டிமென்ஷியா நீண்ட காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மிகவும் மோசமான நோய். இதைப் பற்றி நாங்கள் ஆராய்ச்சி செய்தபோது, ​​iந்த நோயைத் தடுப்பதில் நார்ச்சத்து உணவு மிகவும் உதவிகரமாக இருப்பது தெரிய வந்தது. வயது வந்த ஆயிரக்கணக்கானவர்களிடம் ஆராய்ச்சி செய்ததில் இந்த முடிவு வெளியாகியுள்ளது. இந்த ஆய்வு 1980 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.


மேலும் படிக்க | Health Alert! மறதி, குழப்பம் அதிகமாக இருக்கிறதா; Vitamin B குறைபாடு இருக்கலாம்!


இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றவர்களிடம் 1985 மற்றும் 1999 க்கு இடையில் அவர்களின் உணவில் சேர்க்கப்பட்ட நார்ச்சத்து அளவு பற்றி கேட்கப்பட்டது. இந்த பங்கேற்பாளர்கள் அனைவரும் 40 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள். இதற்குப் பிறகு, 1999 மற்றும் 2020 க்கு இடையில் அவரது உணவு பழக்கம் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டன.


மேலும் படிக்க | இதய ஆரோக்கியம்: மாரடைப்பு அபாயத்தை நீக்கும் ‘சிறந்த’ உணவுகள்!


இதன் பிறகு, அவர்களின் உணவில் உள்ள நார்ச்சத்து சேர்த்துக் கொண்ட விகிதத்திற்கு ஏற்ப, வெவ்வேறு குழுக்களாக அவர்களை பிரித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. உணவில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளவர்களுக்கு டிமென்ஷியா எனப்படும் மறதி நோய் ஏற்படும் அபாயம் குறைவு என்பது ஆய்வுல் தெரிய வந்தது.


இதன் போது, ​​ஆராய்ச்சியாளர்கள் கரையக்கூடிய மற்றும் கரையாத நார் சத்துக்கள் குறித்தும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். கரையக்கூடிய நார்ச்சத்து ஓட்ஸ் மற்றும் பருப்பு போன்ற உணவுகளில் உள்ளது. இது உடலில் நல்ல பாக்டீரியாக்களை பராமரிக்க உதவுகிறது. அதே நேரத்தில், செரிமான அமைப்புக்கு தேவையான காய்கறிகள் மற்றும் முழு தானியங்களில் கரையாத நார்ச்சத்து காணப்படுகிறது. டிமென்ஷியா போன்ற பிரச்சனைகளைத் தடுப்பதைப் பொறுத்த வரையில், கரையக்கூடிய நார்ச்சத்துகள் இதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என தெர்ய வந்துள்ளது.


மேலும் படிக்க | Kidney Health: சிறுநீரகத்தை டேமேஜ் செய்யும் இந்த '5' உணவுகளை தவிர்க்கலாமே..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR