Breaking! Omicron Alert: டெல்லியிலும் நுழைந்துவிட்டது ஒமிக்ரான் வைரஸ்
டெல்லியிலும் ஒமிக்ரான் பாதிப்பு பதிவானது! தான்சானியருக்கு வைரஸ் இருப்பது உறுதியானது
புதுடெல்லி: டெல்லியில் தான்சானியாவைச் சேர்ந்த ஒருவருக்கு இன்று (டிசம்பர் 5, 2021) ஓமிக்ரான் வகை வைரஸ் பாதிப்பு உறுதியானது. இந்தத் தகவல் வெளியானதை அடுத்து தேசிய தலைநகர் டெல்லியில் முன்னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தேசியத் தலைநகரில் இருந்து முதன்முறையாக ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. LNJP மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி தான்சானியாவில் இருந்து திரும்பியவர்.
மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத்தில் ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது தலைநகர் டெல்லியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கவலைகளை அதிகரித்துள்ளது.
முன்னதாக, மும்பைக்கு அருகிலுள்ள கல்யாண் டோம்பிவிலி நகராட்சி பகுதியைச் சேர்ந்தவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது டெல்லி விமான நிலையத்தில் நேற்று கண்டறியப்பட்டது. அவர், தென்னாப்பிரிக்காவிலிருந்து துபாய் வழியாக டெல்லி விமான நிலையத்திற்கு வந்தார். அவர், டெல்லி விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு விமானம் செல்லும் பயணி.
33 வயதான நபர் நவம்பர் 23 அன்று டெல்லிக்கு வந்து, டெல்லி விமான நிலையத்தில் கோவிட்-19 பரிசோதனைக்காக (Covid-19 Testing) தனது மாதிரிகளை கொடுத்துள்ளார். பின்னர் அவர் மும்பைக்கு விமானம் மூலம் புறப்பட்டதாக டெல்லியில் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
கோவிட்-19 இன் ஓமிக்ரான் மாறுபாட்டின் அச்சம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது, ஒமிக்ரான் வகை வைரஸ் இப்போது அதிவேகமாக பல நாடுகளுக்கும் பரவி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR