Union Budget 2021: கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் பொருளாதாரத்தில் அதன் காரணமாக ஏற்பட்ட தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ​​அடுத்த நிதியாண்டில் மத்திய அரசு, சுகாதார முறைமையில் தனது கவனத்தை அதிகமாக செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ம் தேதி இவ்வாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது இதற்கான அறிகுறிகள் கண்டிப்பாக காணப்படும். இதற்கான பல திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவை ஏப்ரல் 1 முதல் செயலாக்கத்தில் வரும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த துறையில் செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 4 சதவீதமாக உயர்த்துவதே திட்டத்தின் முதன்மை நோக்கமாக இருக்கும். சுகாதார செலவினங்களை அதிகரிப்பதற்கான மத்திய அரசின் திட்டம் நாட்டில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. COVID-19 தொற்றுநோயின் ஆரம்ப மாதங்கள் இந்த திட்டத்தின் சோதனை காலம் போல இருந்தன என கூறலாம்.


அடுத்த நிதியாண்டில் மத்திய அரசு (Central Government) சுகாதார செலவினங்களை ரூ .1.1 முதல் ரூ .1.3 லட்சம் கோடியாக உயர்த்த வாய்ப்புள்ளது என்று அரசாங்க வட்டாரங்கள் செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தன. இந்த விஷயத்தில், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ .69,000 கோடியை விட இது ஒரு பெரிய உயர்வாக இருக்கும்.


ALSO READ: Budget 2021: Real Estate துறைக்கு இந்த பட்ஜெட்டில் Good News or Bad News


பிப்ரவரி 1 அன்று பட்ஜெட் 2021 தாக்கல் செய்யப்படும்போது, ஒரு புதிய சுகாதாரத் திட்டத்தை வெளியிடவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இருப்பினும், புதிய திட்டம் குறித்து இதுவரை எந்த வித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.


இது தவிர, சுகாதாரத்துக்கான நாட்டின் செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கு சதவீதமாக உயர்த்துவதற்கான நான்கு ஆண்டு சுகாதார பட்ஜெட் திட்டத்தையும் மத்திய அரசு வெளியிட வாய்ப்புள்ளது. திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு பிரத்யேக சுகாதார நிதியும் அமைக்கப்படும்.


முன்னதாக, 2025 ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீத உயர் பொது செலவு இலக்கை பூர்த்தி செய்ய மத்திய அரசு ஒரு புதிய சுகாதார நிதியை அமைக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. அறிக்கையின்படி, மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த நிதிக்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ALSO READ: Budget 2021: பட்ஜெட் பணிகளின் தொடக்கவிழா Halwa ceremony எதற்காக?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR