சர்க்கரை Vs தேன்... கட்டுக்கதைகளும்... உண்மையும்... நிபுணர்கள் கூறுவது என்ன!
தேனும் சரி, சர்க்கரையும் சரி இரண்டுமே பொதுவாக இனிப்பு சுவையை தான் தருகிறது, ஆனால் ஆரோக்கிய ரீதியாக சர்க்கரையை விட தேன் தான் சிறந்தது என்று கூறப்படுகிறது.
தேனும் சரி, சர்க்கரையும் சரி இரண்டுமே பொதுவாக இனிப்பு சுவையை தான் தருகிறது, ஆனால் ஆரோக்கிய ரீதியாக சர்க்கரையை விட தேன் தான் சிறந்தது என்று கூறப்படுகிறது. தேன் என்பது பூக்களின் தேனை சேகரிக்கும் தேனீக்களால் உற்பத்தி செய்யப்படும் இயற்கையான இனிப்பு. தேனில் குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் உள்ளது. இது சர்க்கரையை விட இனிமையானது. எனினும் இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் கலவையையும் கொண்டுள்ளது. தேனில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளது தேன் மற்றும் சர்க்கரையில் பல்வேறு வகைகள் உள்ளது, இவை அளவு மற்றும் தரத்திற்கு ஏற்ப விலையில் விற்கப்படுகிறது. பூக்களிலுள்ள தேன்களை தேனீக்கள் எடுத்து சென்று சேமிக்கும். இதன் மூலமாக தான் நாம் தேனை பெறுகிறோம் . மறூபுறம் சர்க்கரையை கரும்பு சாறிலிருந்து பிரித்தெடுக்கிறோம். தேனானது கெட்டியான திரவம் போன்றும், சர்க்கரையானது கிரிஸ்டல் அல்லது பவுடர் வடிவிலும் கிடைக்கிறது. கலோரி அளவை பொறுத்தவரை 1 ஸ்பூன் தேனில் 20 கலோரிகளும், 1 ஸ்பூன் சர்க்கரையில் 15 கலோரிகளும் உள்ளது.
நாம் சர்க்கரையைப் பற்றி பேசும்போது, கரும்பில் இருந்து தயாரிப்படும் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரையை தயாரிக்கும் போது அனைத்து ஊட்டச்சத்துக்களும் அகற்றப்படும் என்பதால், பொதுவாக, சர்க்கரையை விட தேன் நிச்சயமாக சிறந்த தேர்வாகும். தேன் பல ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆனால் எடை இழப்புக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கு உணவில் சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்துவது சிறந்த மாற்றாக இருக்குமா...!
தேன் Vs சர்க்கரை - தேன் ஆரோக்கியமானதா?
சர்க்கரையை விட தேனில் அதிக கலோரி உள்ளது
ஒரு டீஸ்பூன் தேனில் 64 Kcal கலோரி உள்ளது என்று உணவியல் நிபுணர் கூறுகின்றனர். நீங்கள் ஒரு டீஸ்பூன் சர்க்கரையை எடுத்துக் கொண்டால், அதில் 48 கலோரி மட்டுமே உள்ளது. இது தேனில் உள்ள கலோரி அளவை விட மிகக் குறைவு. ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால்,
சர்க்கரையை விட தேனில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம்
எடை இழப்பு உணவில் கார்போஹைட்ரேட்டுகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. விரைவாக உடல் எடையை குறைக்க குறைந்த கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வதே சிறந்தது. ஆனால் உங்கள் உணவில் சர்க்கரையை தேன் சேர்த்துக் கொண்டால், நீங்கள் அதிக கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்ளலாம். உணவியல் நிபுணர்கள் இது குறித்து கூறூகையில், தேனில் 17 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதாகவும், சர்க்கரையில் 14 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதாகவும் கூறினார். வித்தியாசம் அதிகம் இல்லை, ஆனால் தேனில் அதிகம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உங்கள் உடலில் என்ன நடக்கும்?
கிளைசெமிக் குறியீடு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும்
ஆம், தேன் மற்றும் சர்க்கரையின் கிளைசெமிக் இண்டெக்ஸில் வித்தியாசம் அதிகம் இல்லை என்று உணவு நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே இது கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும் என்று கூறலாம். எனவே, நீரிழிவு உணவுக்கு தேன் சிறந்த மாற்றாக இல்லை.
தேனில் உள்ள ஊட்டச்சத்து
சர்க்கரையுடன் ஒப்பிடுகையில், தேன் அதிக அளவு இரும்பு, கால்சியம் மற்றும் பிற சத்துக்களைக் கொண்ட ஒரு ஊட்டச்சத்து சக்தியாகும், ஆனால் நாம் அதை சாப்பிடாமல் இருந்தால் இழப்பு அதிகம் என கூற முடியாது. ஏன்னென்றால், தேன் என்பது சிறிதளவே எடுத்துக் கொள்ளப்படும் ஒரு உணவு. அதனால், ஊட்டசத்து இழப்பு என்பது அதிகம் இருக்காது.
சீரான உணவுக்கு மிதமான அளவில் தேன் பயன்படுத்தப்படும் போது சர்க்கரைக்கு ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான மாற்றாகும். ஆனால், நீரிழிவு நோயாளிகளுக்கு, தேன் மற்றும் வழக்கமான சர்க்கரை இரண்டும் ஒரே மாதிரியான முறையில் வளர்சிதைமாற்றம் செய்யப்பட்டு, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதே போன்று உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கும் மாற்றானதாக இருக்க இயலாது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஈஸியா உடல் எடை குறைக்கணுமா? அப்போ இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ