ஈஸியா உடல் எடை குறைக்கணுமா? அப்போ இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க

உடல் எடையை குறைக்க உதவும் ஸ்நாக்ஸ் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். 

 

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஸ்நாக்ஸில் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும். எனவே டயட்டில் இருக்கும் போது மாலை நேரத்தில் பசி எடுத்தால் என்ன சாப்பிடலாம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

 

1 /5

க்டீன் டீ: டீ, காபி குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் க்ரீன் டீ எடுத்து கொள்ளலாம்.பெண்களுக்கு க்ரீன் டீ தரும் நன்மைகள் ஏராளம். அதனுடன் சேர்த்து உடல் எடையை குறைக்க க்ரீன் டீ உதவுகிறது.   

2 /5

விதைகள்: உடல் எடையை குறைக்க உதவும் விதைகளான, பூசணி விதை, ஆளி விதை, சூரிய காந்தி விதை  ஆகியவற்றை வறுத்து சாப்பிடலாம். அல்லது வறுத்து பொடியாக்கியும் உட்கொள்ளலாம்.   

3 /5

சூப்: தக்காளி சூப், வெஜிடபிள் சூப் போன்ற ஆரோக்கியமான சூப்களில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன. எனவே உடல் எடையை குறைக்க மாலை நேரத்தில் சூப் குடிப்பது மிகவும் பயன் தரும். காய்கறி சூப்களை குடிக்கலாம்.   

4 /5

கொண்டைக்கடலை: வேகவைத்த கொண்டைக்கடலை உடலுக்கு மிக மிக நல்லது. கொண்டைக்கடலை சாட்டில் புரதம் நிறைந்துள்ளது, இது எடை இழப்புக்கு ஏற்றது.  

5 /5

பயிர்கள்: பயிர்கள் ஒரு ஊட்டச்சத்து சக்தி மற்றும் இந்தியாவில் பிரபலமான சிற்றுண்டி ஆகும். வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் இதில் உள்ளது. எனவே பயிர்களை ஈர துணியில் கட்டி வைத்து, முளைக்கட்டிய பயிர்களாக மாலை நேரத்தில் சாப்பிடலாம். உடல் எடை ஈஸியாக குறையும்.