நாள் ஒன்றுக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் நீங்கள் எப்போதும் மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய தேவையில்லை என்று ஆப்பிளின் மகத்துவம் பற்றி கூறப்படுகிறது.  ஆப்பிள் பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில் கண்ணை பறிக்கும் விதமாக இருக்கும், இந்த பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடும்பொழுது அவர்களது உடலில் இன்சுலின் எதிர்ப்பு குறைத்து ரத்த சர்க்கரை அளவை குறைக்க வழிவகுக்கும்.  ஆப்பிளில் காணப்படும் பாலிபினால்கள் கணையத்தில் இன்சுலினை வெளியிடவும், செல்கள் சர்க்கரையை உறிஞ்சுவதற்கு உதவுகிறது என்று மருத்துவர்கள் ஆப்பிள் பற்றி கூறுகின்றனர்.  சிவப்பு நிற ஆப்பிள்கள் பார்ப்பதற்கு அழகாகவும், இனிப்பான சுவை கொண்டவையாக இருந்தாலும், பச்சை நிற ஆப்பிளில் குறைந்த அளவு சர்க்கரை, அதிக நார்ச்சத்து மற்றும் அதிக ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்துள்ளது, இதனை சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவு குறையும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இள நரை பிரச்சனையா... உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய ‘முக்கிய’ உணவுகள்! 


ஆப்பிளில் அதிக ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் இதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் ரத்த சர்க்கரை அளவை பாதிக்கலாம்.  நீரிழிவு நோய் இருப்பவர்கள் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும்.  ஒரு ஆப்பிளில் 27 கிராம் கார்போஹைட்ரேட்டுகள், 4.8 கிராம் நார்ச்சத்துக்களும் உள்ளது, ஆப்பிளில் காணப்படும் சர்க்கரையின் பெரும்பகுதி பிரக்டோஸ் ஆகவுள்ளது.  ஆப்பிளை தினமும் சாப்பிடுவதன் மூலம் உடலிலுள்ள இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கும் ஆற்றல் அதிகரிக்கிறது.  ஆப்பிளில் உள்ள சில ஃபிளாவனாய்டுகள் கார்ப் செரிமானத்தை குறைப்பதன் மூலம் இரத்த குளுக்கோஸ் அளவை மேம்படுத்த உதவுகின்றன.  339,383 நபர்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் டைப் 2 வகை நீரிழிவு அபாயம் குறைவாக இருப்பது கணடறியப்பட்டுள்ளது.  



ஆப்பிளில் பெக்டின் ஃபைபர் நிறைந்துள்ளது, இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.  இதிலுள்ள நீர்சத்து உங்களது வயிற்றுக்கு நிறைவான உணர்வை தருவதால் நீங்கள் அதிகப்படியான உணவுகள் எடுத்துக்கொள்வது தவிர்க்கப்பட்டு உடல் எடை குறைகிறது.  ஆப்பிளில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மூளை ஆரோக்கியம் சிறப்பாக செயல்படுகிறது.  ஆப்பிளை உணவுடன் சேர்த்து சாப்பிடாமல் காலை அல்லது மாலையில் சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளும்போது அதன் முழு பலனையும் பெறலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.


மேலும் படிக்க | Oats For Weight Loss: உடல் எடையை குறைக்க ஓட்ஸை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ