முக்கனிகளில் ஒரு கனி மாம்பழம். மாம்பழம் பலருக்கும் விருப்ப பழமாக இருக்கிறது. இதனால் அதனை அதிகம் சாப்பிடுபவர்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இதனால் அவர்களது உடலுக்கு சில பிரச்னைகள் உருவாகலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரவு நேரத்தில் மாம்பழத்தை சாப்பிடவேக்கூடாது. இரவு நேரத்தில் செரிமான மண்டலம் பலவீனமாக இருப்பதால் எளிதில் ஜீரணமாகும் உணவை எடுத்துக்கொள்வது நல்லது. மாம்பழம் செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் இரவில் அதனை சாப்பிட்டால் வயிறு உப்புசம் உருவாக வாய்ப்பு இருக்கிறது.



 வயிற்று போக்கு, வாந்தி ஏற்படக்கூடும். உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் மாம்பழம் அதிகம் சாப்பிடுவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரவில் தினமும் மாம்பழம் உட்கொண்டு வந்தால் உடல் எடை அதிகரிக்க தொடங்கிவிடும். சர்க்கரை நோயாளிகளும் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள்.


மேலும் படிக்க | தினமும் காலையில் எலுமிச்சை சாறு குடிப்பதால் என்ன நன்மைகள்..


மேலும் இரவில் அறவே தவிர்த்துவிட வேண்டும். இல்லாவிட்டால் ரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்துவிடும். இயற்கையாகவே மாம்பழம் சூடான தன்மை கொண்டது. 


இரவு நேரத்தில் அதனை சாப்பிட்டால் உடல் சூடு அதிகரித்துவிடும். முகப்பரு போன்ற சரும பிரச்னைகளையும் ஏற்படுத்திவிடும். 


சர்க்கரை நோயாளிகள் தவிர மற்ற நபர்கள் ஒரு நாளைக்கு 330 கிராம் அளவுக்கு மாம்பழம் சாப்பிடலாம். மாம்பழத்தை சாப்பிடுவதற்கான சிறந்த நேரம் மதிய வேளைதான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இரவில் மாம்பழத்தை தவிர்த்து ஆரோக்கியத்தை பேணலாம்.


மேலும் படிக்க | ஃபிட்டாக இருக்கணுமா, காலையில் எழுந்ததும் இந்த பானங்களை குடிங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR