கோடை காலத்தில் மாம்பழம் சாப்பிடலாமா? இதனால் நன்மை விளையுமா? தீமை ஏற்படுமா?
பழங்களில் பலவித ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. அந்தந்த காலங்களில் அந்தந்த பருவகால பழங்களை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். அவை அந்த பருவ நிலைக்கு ஏற்ப நமது உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்தை அளிக்கின்றன.
பழங்களில் பலவித ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. அந்தந்த காலங்களில் அந்தந்த பருவகால பழங்களை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். அவை அந்த பருவ நிலைக்கு ஏற்ப நமது உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்தை அளிக்கின்றன.
கோடை காலங்களில் பழங்களை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். குறிப்பாக, கோடைக்காலத்தில் தேவைப்படும் நீர்சத்து நமக்கு பழங்களின் மூலம் கிடைக்கின்றன.
மாம்பழம் (Mangoes) கோடைக்காலத்தில் வரும் முக்கியமான ஒரு பழமாகும். ஆனால், பலர் ஒரு வித அச்சம் காரணமாக மாம்பழத்திலிருந்து விலகியே இருக்கின்றனர். மாம்பழம் சாப்பிடுவதால், உடலின் சூடு அதிகரிக்கும் என்றும் உடல் எடை அதிகரிக்கும் என்றும் பலர் கருதுகிறார்கள். ஆனால், இந்த அச்சம் தேவையான அச்சம்தானா? அல்லது வீணான பீதியா?
மாம்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தாமிரம் மற்றும் ஃபோலேட் ஆகிய ஊட்டச்சத்துகள் உள்ளன என்றும் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான பல நல்ல அம்சங்கள் இதில் நிறைந்துள்ளன என்றும் உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், மாம்பழத்தில் கொழுப்புச்சத்து ஒரு சதவிகிதம் மட்டுமே உள்ளது.
இவற்றைத் தவிர பிற நன்மைகளும் மாம்பழத்தில் ஏராளமாக உள்ளன.
ALSO READ: கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கும் உணவு வகைகள் இதோ: தொற்றும் தொல்லையும் ஓடிப் போகும்
மாம்பழம் புரோட்டீன் மற்றும் ஃபைபரை உடைத்து ஜீரணிப்பதை (Digestion) எளிதாக்குகிறது. இது செரிமான அமைப்பை திறம்பட வைத்திருக்கிறது. உணவில் உள்ள நார்ச்சத்து இதய நோய், வகை 2 நீரிழிவு நோய் ஆகியவற்றை குறைக்க உதவுகிறது. மாம்பழத்தில் நார்சத்து அதிகம் இருப்பதால், இந்த பழம் நம்மை பல வித நோய்களிலிருந்து பாதுகாக்கும். மாம்பழம் உங்களது எடையை எப்போதும் அதிகரிக்காது.
தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவது உங்கள் எடையை அதிகரிக்குமா?
மாம்பழத்தை மாம்பழ ஜூசாகவோ, பாலுடன் கலந்து மில்க் ஷேக்காகவோ, ஐஸ்கிரீமாகவோ தினமும் உட்கொண்டால் மட்டுமே உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது என உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆகையால், மாம்பழத்தை பானமாக குடிப்பதை விட சாப்பிடுவதே நல்லது என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
மாம்பழங்களில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் காணப்பட்டாலும், ஒரு நாளில் ஒரு மாம்பழத்தை மட்டுமே சாப்பிட வேண்டும். பலர் பெரும்பாலும் உணவு உட்கொண்ட பிறகு, மாம்பழத்தை சாப்பிடுவார்கள். ஆனால், இது சரியான முறையல்ல. இதனால் உடல் எடை அதிகரிக்க (Weight Gain) அதிக வாய்ப்புகள் உள்ளன.
மாம்பழம் மூலம் அதிக ஊட்டச்சத்துக்களை பெறுவதை எவ்வாறு உறுதிப்படுத்துவது?
நீங்கள் உணவு உட்கொள்ளும்போது அதனுடன் மாம்பழத்தை சாப்பிடாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஒரு நாளைக்கு ஒரு மாம்பழம் என்ற அளவில் உங்களை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த அற்புதமான பழத்தை அளவோடு சாப்பிட்டு, அதன் முழு பயனையும் அனுபவியுங்கள்.
ALSO READ: வாய் துர்நாற்ற பிரச்சனையா? இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் உங்களுக்கு கை கொடுக்கும்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR